பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௫௪(254)

அகநானூறு


(வி-ரை.) முருகக் கடவுள் மிக்க செந்நிறமுடைய ரென்பது சேய், செவ்வேள் என்னும் பெயர்களானும், 1'பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு" 2'பவழத் தன்னமேனி” என்பவற்றானும் அறியப்படும். செவ்வானத்திற்கு நெடுவேளின் செம்மேனியும், அவ் வானத்தை யொட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கினத்திற்கு அவரது மார்பிலணிந்த முத்தாரமும் உவமமாயின ; ஆற்றுப் படையால் முருகவேளை யேத்திய ஆசிரியர் நக்கீரனாரது அன்பு கனிந்த திருவுள்ளத்தில் செவ்வானையும் அதனை யொட்டிப் பறந்து செல்லும் கொக்கின் நிரையையும் கண்டுழிச் செவ்வேளின் திருமேனியும் அவரது மார்பின் முத்தாரமும் தோன்றுவது இயல்பேயாம்.' கொக்கின் நிரை என்பது பாடமாயின் கொக்கின் கூட்டம் என்க. உகப்பு - உயர்வு ; பறையுகப்ப. உயர்ந்து பறக்க வெனக் கொள்க. சாயல் இவள் எனக் கூட்டுக. மெலிந்து என்பதனை மெலியவெனத் திரிக்க. அன்றில் அகவும் ஆங்கண் என்றதனால் தலைவன் வராவிடில் தலைவிக்குண்டாம் ஏதம் குறிக்கப்பட்டது ; 3'எல்லி, . . . அன்றில், துணையொன்று பிரியினுந் துஞ்சா காண் " என்பதன் உரை காண்க.

இது நெய்தலிற் களவு ; 4'திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே” என்பதனால் அமைந்தது.


(மே - ள்.) 5'நாற்றமும் தோற்றமும்' என்னுஞ் சூத்திரத்து, தோழி தலைவனை வேளாண் பெருநெறி வேண்டிக்கோடற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் இளம்.

6'வைகுறு விடியல்' என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள், பகற்குறிக்கண் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்டு உரைத்தது என்றும், ஈண்டு நெய்தற்கு எற்பாடு வந்ததென்றும், 7'பொழுதும் ஆறும் காப்பும்' என்னுஞ் சூத்திரத்து, ‘வல்வி லிளையரொடு . . . பெருங்கழி நாட்டே' என்பது, 'இரவினும் பகலினும் நீ வா' எனத் தோழி கூறுவதற்கு உதாரணமாகும் என்றும், இங்ஙனம் களவு அறிவுறுமென்று அஞ்சாது வருக என்றலின் வழுவேனும், தலைவி வருத்தம்பற்றிக் கூறலின் அமைத்தார் என்றும், 8'தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும், உரியர் என்ப' என்னுஞ் சூத்திரத்து, 'பிற' ஆவன கோவேறு கழுதையும் சிவிகையும் முதலியனவாம் என்றும், 'கழிச்சுறா வெறிந்த புட்டா ளத்திரி . . பரிமெலிந் தசைஇ என வருதல் அதற்கு உதாரணமாகுமென்றும், இன்னும் இச் சூத்திரத்து (இயங்கலும் என்ற) உம்மையால் இளையரோடு வந்து தனித்துக் கூடுதலுங் கொள்க; இதற்கு ‘வல்விலிளையரொடு . . . சிதைகு வதுண்டோ' என்பது உதாரணமாகு மென்றும் கூறினர் நச்.





1. முருகு, உ. 2, குறுந். கடவுள் வாழ்த்து . 3. அகம். ௫௦. 4. தொல் . அகத், கஉ. 5. தொல், கள. உ௪: 6. தொல், அகத். ௮. 7. தொல் பொருளி. க௬. 8. தொல். பொருளி. கஅ.