பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7]களிற்றியானை நிரை௨௩

 

உடைய, பலவின் ஆய் சுளை மேய் கலை உதிர்த்த = பலாவினது சிறந்த சுளைகளை உண்ணும் முசுக்கலைகளால் உதிர்க்கப்பெற்ற, துய் தலை வெண் காழ் பெறூஉம் = தலையில் ஆர்க்கினையுடைய வெள்ளிய பலா வித்துக்கள் எங்கணும் கொள்ளக்கிடக்கும், கல்கெழு சிறுகுடிக் கானவன் மகள் = மலையிடத்தே பொருந்திய சிறு குடியை யுடைய கானவன் மகளாகிய என்மகள்,

௮-௯. தன் சிதைவு அறிதல் அஞ்சி = தனது குற்றத்தினை நான் அறிந்தமைக்கு அஞ்சி, ஒண்சுடர் நல்இல் அருங்கடி நீவி = மிக்க ஒளி பொருந்திய எங்கள் நல்ல இல்லின் அரிய காவலைக் கடந்து,

௧௧-௩. வலை காண் பிணையின் போகி = வலையினை முன்னர்க் காணும் பெண் மான் அதனைத் தப்பி யோடுமாறு (விரைந்து) சென்று, தொலைவுஇல் வெள்வேல் ஓர் விடலையொடு = தோற்றல் இல்லாத வெள்ளிய வேலினையுடைய ஒரு தலைவனொடு, இச் சுரம் ஈங்குப் படர்தந்தோள் = இச் சுரத்தே இந் நெறியில் சென்றனள்;

௧௩-௬. அ இடை = அப்பொழுதே, அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென = அருஞ்சுரத்துக் கள்வர் ஆக்களைத் தொழுவினின்றுங் கொண்டகன்றனராக, பின் படு பூசலின் வழிவழி ஓடி = அவர்கள் பின் சென்று செய்யும் போரினைப்போலப் பின்னே பின்னே (தொடர்ந்து) செல்லுமிடங்களி லெல்லாம் ஓடி, மெய்த் தலைப்படுதல் செய்யேன் = அவள் மேனியை அணுகப் பெற்றிலேன்;

௧௬-௭. இத்தலை நின்னொடு வினவல் கேளாய் = இவ்விடத்து நின்னொடு வினவுகின்றதை விரும்பிக் கேட்டு (அவர்கள் செல்லும் நெறியினைக் கூறுவாயாக.)

(முடிபு) நவ்வி! நான் என் மகளை நோக்கி, பேதையல்லை; முகஞ் செய்தன, இலங்கின, சான்ற, உடையை, அணங்குடைய, ஆதலால் காப்பும் பூண்டிசின், படாஅல், இனி யாங்கணும் போகலை எனவும், பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்தெனவும் கூற, அக் கானவன் மகளாகிய என் மகள் அஞ்சி, நீவி, போகி, விடலையொடு ஈங்குப் படர்தந்தோள்; வழிவழி யோடி மெய்த்தலைப் படுதல் செய்யேன்; இத்தலை நின்னொடு வினவல் கேளாய்; (அவர்கள் செல்லும் நெறி கூறுவாயாக.)

தாலியினையும் அல்குலினையும் உடைய கானவன் மகள் எனவும், கானவன் மகளாகிய என் மகள் எனவும் கூட்டுக.

(வி - ரை). இச் செய்யுளின் துறை கூறிய நச்சினார்க்கினியர், இது கானவன் மகளைக் கண்டு கூறியதுமாம் என, 'எஞ்சியோர்க்கும்' என்னும் சூத்திரத்துக் கூறலின், 'பொன்னொடு. . .கானவன் மகளே' எனுமிச் செய்யுட் பகுதியை, செவிலி தான் கானகத்தே கண்டதோர் மகளை விளித்துக் கூறியதாகக் கோடலுமாம்; அங்ஙனம் கொள்ளின், 'இன்சிலை. . .போகி' என்ற பகுதியை, 'இன்சிலை ஏறுடையினத்த வலைகாண் நாறுயிர் நவ்விப் பிணையிற்போகி' எனக் கூட்டி யுரைத்துப் போகிப் படர்தந்தோள் என முடிக்க. 'மூப்பு'

 

 

1. தொல். அகத். ௪௩.