பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௪அகநானூறு[பாட்டு

என முன் வந்தமையின், 'முதுபதி' பதியென்னும் பெயர் மாத்திரையேயாகும். சின் - அசை. நவ்வியின் இனிய குரலைப் பாராட்டுவாள் இன்சிலை என்றாள். வெப்பம் தாங்கலாற்றாது உயிர்த்திடும் இளமைச் செவ்வியினதாதல், நாறுயிர் நவ்வி என்றதனாற் குறிக்கப்பட்டது. வலையைச் சேய்மைக்கண் கண்டதொரு பிணை அதனை அணுகாது விலகியோடி மறைவது போல, தனது இற் செறிப்பினைக் கண்டஞ்சிக் கழிந்தனள் என்றாள். நாறுதல் - தோன்றுதல். உயிர் - உயிர்ப்பு. அத்தக் கள்வர் என்றது வெட்சி மறவரை. பிற்படு பூசல் - பின்னே தொடர்ந்து சென்று மீட்கும் கரந்தையாரின் போர். அவள் கானக மகளாதலின் நினக்கும் ஓர் அடைவு உண்டு ஆதலின் கூறுவாயாக என்றாள். பூசலின்: இன், ஒப்பு.

(மே - ள்.) தலைவி கூற்று நிகழ்த்துமாறு கூறும் 'மறைந்தவற் காண்டல்' என்னும் சூத்திரத்துத் 'தமர்தற் காத்த காரண மருங்கினும்' என்னும் பகுதிக்கு, இச் செய்யுளையும் எடுத்துக் காட்டி, (தலைவி தோற்றப் பொலிவு கண்டு தமர் அவளை வெளியிற் செல்லாது காத்தனர் என்பார்) 'என்றன தோற்றப் பொலிவாற் காத்தன' என்றும், 'எஞ்சியோர்க்கும்' என்ற சூத்திரத்துச் செவிலிக்கும் கூற்று உண்டு என்று கூறி, 'முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின' என்னும் அகப்பாட்டு, 'மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின் சென்று நவ்விப் பிணையைக் கண்டு சொற்றது; செவிலி கானவர் மகளைக் கண்டு கூறியதுமாம்' என்றும் கூறுவர்,நச். 'மரபே தானும்' என்ற சூத்திரத்துப் 'புலிப்பற்கோத்த. . . அல்குல்' எனும் இச்செய்யுட் பகுதியைக் காட்டி ' என்பது பருவத்திற்கேற்ற அணி கூறியது' என்பர் பேரா.


8. குறிஞ்சி

{தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவளாய்த் தலைமகள் சொல்லியது.]


ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த
குறும்பி வல்சிப் பெருங்கை யேற்றை
தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின்
பாம்புமதன் அழியும் பானாட் கங்குலும்

௫)அரிய அல்லமன் இகுளை பெரிய
கேழல் அட்ட பேழ்வா யேற்றை
பலாவமல் அடுக்கம் புலவ ஈர்க்கும்
கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு
வாழை யோங்கிய தாழ்கண் அசும்பில்

௧௦)படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலிய
பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
விண்டோய் விடரகத் தியம்பும் அவர்நாட்



1. தொல். கள. ௨௦. 2. தொல். அகத். ௪௨. 3. தொல். செய். ௮௦.