பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௮அகநானூறு[பாட்டு

(சொ - ள்.) ௧-௧௦. கொல் வினைப் பொலிந்த = கொற்றொழிலாற் சிறந்த, கூர் குறு புழுகின் = கூரிய குறிய புழுகெனப் பெயரிய, வில்லோர் தூணி வீங்கப் பெய்த = வில்வீரர் அம்புக் கூட்டில் மிகப் பெய்திருக்கும், அப்பு நுனி ஏய்ப்ப = குப்பி நுனியை ஒப்ப, அரும்பிய இருப்பை = அரும்பிய இருப்பையது, செப்பு அடர் அன்ன = செப்புத் தகட்டை யொத்த, செங்குழை அகம்தொறும் = சிவந்த தளிரிகளினிடந்தொறும், இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் = நெய்யை யொத்த இனிய துளையுள்ள பூக்கள், ஆர் கழல்பு = ஆர்க்குக் கழன்று, உழுதுகாண் துளையவாகி = காம்பினை நீக்கிக் காணத்தக்க துளையினை யுடையவாய், ஆலி வானிற் காலொடு பாறி = வானினின்று விழும் பனிக்கட்டிபோலக் காற்றாற் சிதறுண்டு, துப்பின் அன்ன செங்கோட்டு இயவில் = பவளம் போன்ற சிவந்த மேடாகிய வழிகளில், நெய்த்தோர் மீமிசை நிணத்தில் பரிக்கும் = குருதி மீதுள்ள கொழுப்பெனப் பரக்கும், அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் = சுரத்திலே பொருந்திய அழகிய குடிகளையுடைய சிற்றூர்க் கண்ணே,

௧௧-௨. கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய தொடிமாண் உலக்கை தூண்டு உரல் பாணி = வளைந்த நுண்ணிய கூந்தலினையுடைய பெண்டிர்கள் உயர்த்த பூண்மாண்ட உலக்கையாற் குற்றும் உரலினின்றெழும் ஒலி,

௧௩-௪. நெட்மால் வரைய குடிஞையோடு இரட்டும் குன்று = நெடிய பெரிய பக்க மலையிலுள்ள ஆந்தை யொலியொடு மாறி மாறி ஒலிக்கும் குன்றுகள், பின் ஒழியப் போகி = பின்னே ஒழிய முன்னே போய்,

௧௪-௭. ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது = ஞாயிறு மறைந்திடினும் ஊர் சேய்மையிடத்தது என்று கூறி யொழியாது, துனைபரி உரம் துரந்து = விரைந்து செல்லும் குதிரைகளை வலியாற் செலுத்தி, துரக்கும் = மேலும் மேலும் முடுக்குகின்ற, துஞ்சாச் செலவின் = மடிதல் இல்லாத போக்கினையுடைய, எம்மினும் = எம்மைக் காட்டினும்,

௨௪-௬. நாணொடு மிடைந்த கற்பின் = நாணொடு செறிந்த கற்பினையும், வாள்நுதல் = ஒள்ளிய நெற்றியினையும், அம் தீங் கிளவி = அழகிய இனிய சொல்லினையுமுடைய, குறு மகள் = இளையோளது, மெல் தோள் பெற நசைஇ சென்ற = மெல்லிய தோளை அடைதற்கு விரும்பிச் சென்ற, என் நெஞ்சு = என் நெஞ்சம்,

௧௭. விரைந்து வல் எய்தி = மிக விரைந்து சென்று,

௧௭-௨௩. பல் மாண் ஓங்கிய நல் இல் = பல கட்டுக்களால் மாண்புற உயர்ந்த நல்ல இல்லில், ஒரு சிறை நிலைஇ = ஓரிடத்தே நின்று, பாங்கர் பல்லி படுதொறும் பரவி = நற் பக்கத்தே பல்லி ஒலிக்குந்தோறும் அதனைப் போற்றி, கன்று புகு மாலை நின்றோள் எய்தி = ஆன் கன்றுகள் இல்லிற்கு வந்துறும் மாலைக் காலத்தே நின்றவளை அடைந்து, கை கவியாச் சென்று குறுகி கண் புதையா = கையைக்