௧௦களிற்றியானை நிரை[௨௯
கவித்துச் சென்று குறுகிக் கண்ணைப் புதைத்து, பிடிக்கை அன்ன பின்னகந் தீண்டி = பெண் யானையின் கையை ஒத்த பின்னின கூந்தலைத் தீண்டி, தொடிக் கை தைவர தோய்ந்தன்று கொல் = அவளது தொடியணிந்த கை பொருந்தத் தழுவியது கொல்லோ!
(முடிபு) சீறூர் உரற் பாணி இரட்டும் குன்று ஒழியப்போகி துஞ்சாச் செலவின் எம்மினும் என் நெஞ்சு விரைந்து சென்று மாலை நின்றோள் எய்திக் குறுகித் தோய்ந்தன்று கொல்.
(வி - ரை.) புழுகின் அப்பு எனக் கூட்டி, புழுகாகிய அப்பு என்க. புழுகு - அம்பின் தலையிற் செறிக்கும் குப்பி: இது மல்லிகை மொட்டு எனவும்படும். துய்வாய் = துய்யைத் தன்னிடத்தேயுடைய பூ; துய - பஞ்சு. இழுதினன்ன பூ எனவும், தீம் பூ எவும் இயையும். ஆலிவானின் என்பதனை வானின் ஆலி என மாறுக. ஆலி - நீர்க்கட்டி; ஆலம் - நீர். காலொடு - காலால். துப்பின் அன்ன - சாரியை நிற்க உருபு தொக்கது. பரித்தல் - ஈண்டுப் பரத்தல். பாணி - உலக்கையாற் குற்றும்பொழுது பாடும் வள்ளைப் பாட்டுமாம். இரட்டுதல் - மாறியொலித்தல். வல் விரைந்து என மாறுக. பல்லி சொல்லுந்தொறும் பரவுதல் உலக வழக்கு. கன்று புகுதல் மாலைக்கு அடை. தன் வருகையைக் காண விருப்புற்றுத் தலைவி இங்ஙனம் நிற்பள் எனத் தலைவன் பாவிக்கின்றான். எம்மினும் நெஞ்சு வல்விரைந்தெய்தி என்றது தலைவன் தலைவியைக் காண்டற்கு விரையும் விதுப்புத் தோன்ற நின்றது. நெஞ்சு எய்திக் கை கவியாச் சென்று குறுகித் தீண்டித் தோய்ந்தன்று என்பது, 1'நோயும் இன்பமும்' என்னும் சூத்திரத்து, 'உறுப்புடையது போல். . . நெஞ்சொடு புணர்த்தும்' என்பதனால் அமைந்த வழுவமைதி யாகும்.
(மே - ள்). 2'நோயு மின்பமும்' என்னுஞ் சூத்திர வுரையில், 'கை கவியாச் சென்று. . . என்நெஞ்சு' இ ்து உறுப்புடையது போல் உவந்துரைத்தது' என்று நச்சினார்க்கினியரும், 3'மரபேதானும்' என்னுஞ் சூத்திர உரையில் இச் செய்யுளை எடுத்துக் காட்டி, 'என்றவழி, குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்ற பொருள் தத்தம் மரபிற்றாய்ப் பலவும் வந்தன கண்டு கொள்க' என்று பேராசிரியரும் கூறினர்.
[இரவுக்குறிவந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்பட்டு நின்று தோழி சொல்லியது.]
வான்கடற் பரப்பில் தூவற் கெதிரிய
மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த
முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப்
புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப
௫)நெய்தல் உண்கண் பைதல கலுழப்
1. தொல். பொருளி. ௨. 2. தொல். பொருளி. ௨. 3. தொல். செய். ௮௦.