பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13]களிற்றியானை நிரை௩௫

 

(உ - றை.) யானையானது வெருவத்தகாத குரம்பையை வெருவத்தக்க புலியென்று கருதித் தனக் குணவாகிய கழை முறியப் பாயும் என்பது, வெருவத்தகாத எங்கள் தமரை வெருவி வரைய முயலாது நீ திரிதலின், யாங்கள் இறந்துபடும்படியாயிற்று என்றபடியாம்.

(மே- ள்.) 1'பொழுதும் ஆறும்' என்னும் சூத்திரத்து, 'நல்வரை. . . வாழலள்' என்னும் இச் செய்யுட் பகுதியைக் காட்டி 'என்பது இரவும் பகலும் வாரலென்றது வரைதல் வேட்கைப் பொருளதாய வழுவமைதி' என்றனர் நச்.

2'முட்டு வயிற் கழறல்' என்னும் சூத்திரத்து, வரந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடுகளுள் ஒன்றாகிய அவன் புணர்வு மறுத்தல் என்பதற்கு, 'நல்வரை நாட. . .வாழலள்' என்ற பகுதியை எடுத்துக் காட்டி, "என்பது தலைமகள் குறிப்பினைத் தோழி கூறியதாகலான், இ ்து அவன் புணர்வு மறுத்தல் எனப்படும். இ் ்து 3'ஒன்றித் தோன்றும் தோழி மேன' என்னும் இலக்கணத்தாற் றோழி குறிப்பாயினும் தலைமகள் குறிப்பெனவே படும் என்பது கொள்க" என்றுரைத்தனர் பேரா.


 
13. பாலை
 

[பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகளைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்டதூஉமாம்.]

 


4தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்
முனைதிறை கொடுக்குந் துப்பின் தன்மலைத்
தெறலரும் மரபின் கடவுட் பேணிக்
குறவர் தந்த சந்தின் ஆரமும்

௫)இருபே ராரமும் எழில்பெற அணியும்
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியிற் கொண்ட மராஅ யானை
மொழின் உணர்த்துஞ் சிறுவரை யல்லது
வரைநிலை நின்றி இரவலர்க் கீயும்

௧௦)வள்வாய் அம்பிற் கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வ தாயினுந் தெற்கேர்பு
கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்
சாய லின்துணை இவட்பிரிந் துறையின்

௧௫)நோயின் றாக செய்பொருள் வயிற்பட
மாசில் தூமடி விரிந்த சேக்கைக்
கவவின் புறாமைக் கழக வளவயல்


1. தொல். பொருள். ௧௬. 2. தொல். பொருள். ௨௩. 3. தொல். அகத். ௩௯. (பாடம்) 4. தண்கடல், தனகடல்.