பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அகநானூறு


மூலமும் உரையும்


கடவுள் வாழ்த்து


  கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
  தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
  மார்பி னஃதே மையில் நுண்ஞாண்
  நுதல திமையா நாட்டம் இகலட்டுக் 

ரு கையது கணிச்சியொடு மழுவே மூவாய்

  வேலும் உண்டத் தோலா தோற்கே
  ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே
  செவ்வா னன்ன மேனி அவ்வான்
  இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்

க0 றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை

  முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி
  மூவா அமரரும் முனிவரும் பிறரும்
  யாவரும் அறியாத் தொன்முறை மரபின்
  வரிகிளர் வயமான் உரிவை தை இய 

கரு யாழ்கெழு மணிமிடற் றந்தணன்

   தாவில் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே.
                                  --பாரதம் பாடிய பெருந்தேவனார்.
(சொற் பொருள்) அ- கரு. செவ்வான் அன்ன மேனி - சிவந்த வானை யொத்த திருமேனியினையும், அ வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று - அவ்வானில் விளங்கும் பிறையை யொத்த வளைந்த வெள்ளிய கூரிய எயிற்றினையும், எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை முதிராத் திங்களெ சுடரும் சென்னி - நெருப்புக் கப்புவிட் டெரிந்தா லொத்த விட்டு விளங்கும் முறுக்குண்ட சடை இளம் பிறையுடன் ஒளிரும் சென்னி யினை யுமுடைய, மூவா அமரரும் முனி வரும் பிறரும் யாவரும் அறியா - மூப்புறாத தேவரும் முனிவரும் ஏனோரும் ஆகிய யாவரும் அறியாத, தொல்முறை மரபின் – பழமையாகிய தன்மையையுடைய, வரிகிளர் வயமான் உரிவை தை இய -- கோடுகள் விளங்கும் வலிய புலியின் தோலை யடுக்க, யாழ்கெழு மணி மிடற்று - மறையின் பொருந்திய நீலமணி போலும் திருமிடற்றினை யுடைய, அந்தணன் - அந்தணனாகிய சிவபிரான்,

(பாடம்) 1. மலைந்த, ததைந்த.