பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14]களிற்றியானை நிரை௩௭

 

கொள் அமையத்து = மழைக்காலத் தன்மை வாய்ந்திடும் கூதிர் காலத்திற்கு, சாயல் இன்துணை இவள் = இனிய துணையாகிய மென்மை வாய்ந்த இவளை, பிரிந்து உறையின் = பிரிந்துபோய் வேற்று நாட்டுத் தங்குவீராயின்,

௧௫-௭௭. வயிற்பட மாசு இல் தூ மடி விரிந்த = தக்க இடத்தே குற்றமற்ற தூய அறுவை விரிக்கப்பெற்ற, சேக்கை கவவு இன்பு உறாமைக் கழிக = படுக்கைக்கண் முயங்கும் இன்பம் உறாமல் (அப் பனி நாள்) கழியினும் கழிக, செய்பொருள் நாய் இன்று ஆக = நீ தேடுகின்ற பொருட்கு எக்குறையும் நேரா தொழிவதாக.

(முடிபு) தலைவ! பண்ணி தைஇய வேள்வியின் விழுமிது நிகழ்வதாயினும் கூதிர்ப் பொழுதிற்குத் துணையாய இவளைத் தண்பனி நாளில் பிரிந்துறைதயின், அப் பனிநாள் கவவு இன்புறாமைக் கழிக, செய்பொருள் நோயின்றாக.

(வி - ரை.) இரு பேராரமும் அணியும் தென்னவன் மறவனும் இரவலர்க்கு யானை ஈயும் கோடைப் பொருநனுமாய பண்ணி என்றும், வயலில் நெல்லின் அலங்கல் துயல்வர வந்த வாடை குருகு நரல வீசும் பனிநாள் என்றும் கூட்டுக. முத்தின், சந்தின் என்புழி இன்சாரியை அல்வழிக்கண் வந்தன; பிறரால் தெறுதலரிய கடவுள் என்றுமாம். அணியும் மறவன் என்க; அணியும் தென்னவன் என்றுமாம். மொழி - யானைக்குத் தொழில் அறிவிக்கும் குறிப்பு மொழிகள். கோடை - கோட்டூர் என்பர் குறிப்புரையாசிரியர். அமையம் - கூதிர்ப்பொழுது. செய்பொருள் நோயின்றாக என்றது அதற்கு இடையூறு உண்டாம் என்னும் கருத்தால், இடையூறாவது தலைவி தலைவனைப் பிரிந்து உயிர் வாழாமையானாவது. அணையா - அணைந்து என்றுமாம்.

 

 
14. முல்லை
 

[பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.]

 


அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழி
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய

௫)அங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத்
திரிமருப்பிரலை புல்லருந் துகள
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும்பூ வயரப்
பதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான்

௧௦)வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு