பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16]

களிற்றியானை நிரை

௪௧

சேரி செம்மல் மூதூர் அறிந்த மாக்கட்டு ஆகுக = நெருங்கிய சேரிகளைக் கொண்ட தலைமை வாய்ந்திருக்கும் முதிய ஊர்களில் முகமறிந்த மக்களை உடையது ஆகுக.

(முடிபு) எம் வெங்காமம் இயைவதாயின் அவனொடு போகி என் அஞ்ஞை சென்ற ஆறு, துளு நாட்டன்ன செம்மல் மூதூரில் அறிந்த மாக்கட்டு ஆகுக.

கோசர் துளுநாடு என்க. அஞ்ஞை சென்ற ஆறு, வயநிரை பரக்கும் ஆறு எனத் தனித்தனிக் கூட்டுக.

((வி - ரை.) கோசர் மெய்ம்மையிற் சிறந்தவர் என்பது, 1'ஒன்று மொழிக் கோசர்' எனவும், 2'வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை, வளங்கெழு கோசர்' எனவும் வருவனவற்றான் அறியப்படும். இனி மெய்ம்மலி என்பதற்கு உடம்பிலே நிறைந்த எனலுமாம். பீலி - தோகை, சிறை. தோகை - மயில். தில் -விழைவு. பாழி - நன்னனது ஊர். கொன்றைப் பழத்தினைத் துருவித் துளைத்துக் குழலாகக் கொள்ளுதல் உண்டாகலின், குழற்பழம் என்றார். அஞ்ஞை - அன்னை. செவிலி, தலைவியை அருமை பாராட்டி அஞ்ஞை என்றாள்.

(உ - றை.) 'காடி ஆர்கழல் புதுப்பூவை நுகர்ந்த வாயையுடையவாய் அதிலே நிறைந்து, கொன்றைப் பழத்தைக் கோதினாற் போல, அவளும் தலைவனொடு கூடிய இன்பதிலே நிறைந்த செஉருக்கிலே, கூடி வளர்ந்த தோழிமாரையும், பெற்று வளர்த்த என்னையும் புறக்கணித்துப் ப



 
16. மருதம்
 

[பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன் யாரையும் அறியேன் என்றாற்குத் தலைமகள் சொல்லியது.]

 


நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அயலிதழ் புரையும்
மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்

௫)யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
கூரெயிற் றரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்
பொலங்கலஞ் சுமந்த பூண்தாங் கிளமுலை

௧௦)வருக மாளஎன் னுயிரெனப் பெரிதுவந்து
கொண்டனள் நின்றோட் கண்டுநிலைச் செல்லேன்
மாசில் குறுமகள் எவன்பே துற்றனை
நீயுந் தாயை இவற்கென யான்தன்
கரைய வந்து விரைவனென் கவைஇக்


1. அகம். ௧௯௬. 2. அகம். ௨௦௫.