பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

களிற்றியானை நிரை

௪௫


க0-உஉ. கல் என ஊர் எழுந்தன்ன உருகெழு செலவின் - கல்லென்னும் ஒலியுடன் ஓர் ஊரே எழுந்து செல்வதொக்கும் அச்சம் மிக்க செல்கையையுடைய, கொடுங்கோல் உமணர் - கொடிய கோல்களையுடைய உப்புவாணிகர், நீர் இல் அத்தத்து ஆரிடை- நீரற்ற காட்டின் அரிய இடங்களிலே, மடுத்த பகடு தெழி தெள்விளி - தடையுறும் கடாக்களை உரப்பியோட்டும் தெள்ளிய ஒலிகள், நெடும் பெரு குன்றத்து இமிழ் கொள இயம்பும் - நெடிய பெரிய மலையில் எதிரொலி உண்டாக வந்திசைப்பதும், கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல் - கடுமை மிக்க ஞாயிற்றின் கதிர்கள் முறுகிய மூங்கில் அடர்ந்த பக்கமலைகளையுடையதும், பெருகளிறு உரிஞ்சிய மண் அரை யாத்து - பெரிய களிறுகள் உரிஞ்சியதால் சேற்று மண்ணைப் பொருந்திய அடியினை யுடைய யா மரங்களையுடைய, அருஞ் சுரக் கவலைய அதர்படு மருங்கின் - அரிய சுரத்தே கவர்த்த நெறிகள் பொருந்திய பக்கங்களில், நீள் அரை இலவத்து ஊழ்கழி பல்மலர் - நீண்ட அடியினையுடைய இலவ மரத்தின் முதிர்ச்சி மிக்க பலவாய பூக்கள், விழவு தலைக் கொண்ட பழவிறல் முது ஊர் - விழாக்களைத் தன்னிடத்தே கொண்ட பழைய வெற்றியைக் கொண்ட முதிய ஊரில், நெய் உமிழ் சுடரில் - நெய்யைப் பெய்த விளக்கின் சுடர் விழுவதுபோல விழும்படி, கால்பொரச் சில்கி - காற்றுப் பொருத லால் எஞ்சியவை சிலவாகி, வைகுறு மீனில் தோன்றும் - விடிகின்ற காலத்து மீன் போலச் சிலவாய்த் தோன்றுவதுமாகிய, மைபடு மா மலை விலங்கிய சுரன் - மேகங்கள் பொருந்திய பெரிய மலைகள் குறுக் கிட்டு நிற்கும் சுரநெறியினில்,
அ--க0. செல்ல - செல்லுதற்கு, நொதுமலாளன் நெஞ்சு அறப்பெற்ற- ஏதிலாளனது நெஞ்சு தனக்கே யுரித்தாகப் பெற்ற, என் சிறு முதுக்குறைவி - எனது சிறிய மூதறிவுடைய அவளது, சிலம்பு ஆர் சீறடி தாம்-சிலம்பு பொருந்திய சிறிய அடிகள், வல்லகொல்-வல்லுநவோ?

(முடிபு) என் சிறு முதுக் குறைவியாய -என் மகள், முன்பு பந்து சிறிது எறியினும் கழங்கு ஆடினும் அசைஇ முயங்கினள் வதியும். இனி அவள் சிலம்பு ஆர் சீறடி தந்தை அருங்கடி நீவி, மலை விலங்கிய சுரன் செல்லவல்ல கொல்.
உருகெழு செலவின் உமணர் எனவும், ஆரிடை. மடுத்த பகடு எனவும் கூட்டுக. தெள்விளி இயம்பும் மலை எனவும், பிறங்கலையுடைய மலையெனவும், பன்மலர் சில்கித் தோன்றும் மலை யெனவும் இயையும்.
(வி - ரை.) மன் கழிவின் கண் வந்தது. நெடுமொழி - புகழ் ; வஞ் சினமுமாம். அறப்பெறுதல் - உரித்தாகப் பெறுதல் ; ' தன்னுயிர் தானறப் பெற்றானை' (உ௬அ) என்றார் திருவள்ளுவரும். சிறுமுதுக் குறைவி - இளமையிலே அறிவு முதிர்ந்தவள் ; 1'சிறுமுதுக்குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்' என்றார் இளங்கோவடிகளும். உமணர்

1. சிலப், கசு : சுஅ,