பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௪௬

அகநானூறு

[பாட்டு


கூட்டத்து மிகுதியைக் குறித்தற்கு ஊரெழுந்தன்ன என்றார். ஆரிடை - ஏற்றிழிவுடைய இடங்கள். இமிழ்கொள - இனிமை பொருந்த என்றுமாம். களிறு, மாரிக்காலத்து உண்டான சேறு உலர்ந்து விறுவிறுத்த உடலை உரிஞ்சுதலால் யா மரம் மண்ணையுடைய அரையாயிற்று. விடிகின்ற காலத்து, மீன்கள் பல மறையச் சிலவே தோன்றுமாகலின் வைகுறு மீனிற் றோன்றுமென்றார்.


18. குறிஞ்சி

- [தோழி இரவு வருவானைப் பகல் வர வென்றது.)


நீர் நிறம் கரப்ப ஊழுறு புதிர்ந்து
பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்றுக்
கராஅந் துஞ்சுங் கல்லுயர் மறிசுழி
மராஅ யானை மதந்தப ஒற்றி

ரு) உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தங்
கடுங்கட் பன்றியின் நடுங்காது துறந்து
நாம அருந்துறைப் பேர்தந் தியாமத்
தீங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப
ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள்

க0) வாழ்குவள் அல்லளென் தோழி யாவதும்
ஊறில் வழிகளும் பயில வழங்குநர்
நீடின் றாக இழுக்குவர் அதனால்
உலமரல் வருத்தம் உறுதுமெம் படப்பைக்
கொடுந்தேன் இழைத்த கோடுயர் நெடுவரைப்

கரு) பழந்தூங்கு நளிப்பில் காந்தளம் பொதும்பில்
பகனீ வரினும் புணர்குவை அகன்மலை
வாங்கமைக் கண்ணிடை கடுப்பயாய்
ஓம்பினள் எடுத்த தடமென் தோளே.
-- கபிலர்.


(சொ - ள்.) அ. ஓங்கல் வெற்ப - உயர்ந்த மலையையுடைய தலை வனே!

க-ரு. நீர் நிறம் கரப்ப ஊழ் உறுபு உதிர்ந்து பூமலர் கஞலிய கடுவரல் கான்யாற்று - நீரின் நிறம் மறைய முதிர்புற்று உதிர்ந்து அழகிய மலர்கள் நெருங்கிய நீர் கடுகி வருதலையுடைய காட்டாற்றில், கராஅம் துஞ்சும் கல் உயர் மறிசுழி - முதலை தங்கும் உயர்ந்த கல்லில் மோதி மீளும் சுழிகளை யுடையதும், மராஅ யானை மதம் தப ஒற்றி உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் - இனத்தோடு மருவாத களிற்றியானையை அதன் மதம் கெட மோதி வலியுற்று இழுத்தலின் அச்சம் தோன்றுவதுமாகிய வெள்ளத்தினை,