பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௫௦

அகநானூறு

[பாட்டு



 

சிறுபுறம் முயங்கிய என்றான். முயங்கியபின் என்றது முயங்குக எனக் கூறியவாறுமாயிற்று.

(மே - ள்.) 1'புணர்தல் பிரிதல்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, ' இது மறவலோம்புமதியெனப் பிரிவு கூறிற்று' என்றும், 2'நோயு மின்பமும்', என்னுஞ் சூத்திரத்து, கைகவியாச் சென்று ... நெஞ்சே' என்பது, நெஞ்சினை உறுப்புடையதுபோல் உவந்துரைத்தது என்றும், 'வருந்தினை வாழியென் நெஞ்சே ... சிறக்க நின்னுள்ளம்' என்பது, நெஞ்சினை அறிவுடையதுபோல் அழுகை பற்றிக் கூறியது என்றும் கூறினர் நச்.
 

 
20. நெய்தல்
 

[பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.]


பெருநீர் அழுவத் தெந்தை தந்த
கொழுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி
எக்கர்ப் புன்னை இன்னிழல் அசைஇச்
செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி

ரு) ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
தாழை வீழ்கயிற் றூசல் தூங்கிக்
கொண்டல் இடுமணல் குரவை முனையின்
வெண்டலைப் புணரி ஆயமொ டாடி
மணிப்பூம் பைந்தழை தைஇ யணித்தகப்

க0) பல் பூங் கானல் அல்கினம் வருதல்
கவ்வை நல்லணங் குற்ற இவ்வூர்க்
கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை
கடிகொண் டனளே தோழி பெருந்துறை
எல்லையும் இரவும் என்னாது கல்லென

கரு) வலவன் ஆய்ந்த வண்பரி
நிலவுமணல் கொட்குமோர் தேருண் டெனவே.

- 3உலோச்சனார்.

 

(சொ - ள்.) க௩. தோழி,

க-க௦. எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ - கடற்கரைக்கண் மணல் மேட்டிலுள்ள புன்னையின் இனிய நிழலில் தங்கி, பெருநீர் அழுவத்து -கடற்பரப்பினின்று, எந்தை தந்த கொழுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி - நம் தந்தை தந்த கொழுமையாகிய மீனின் வற்றலைக் கவரவரும் பறவைகளை அகற்றியும், செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி - சிவந்த நண்டின் ஆழமான வளைகளைத் தோண்டியும்,


1. தொல். அகத், கச. 2. தொல். பொருளியல். உ. (பாடம்) 3. பொருந்தில் இளங்கீரனார்.