பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

களிற்றியானை நிரை

௫௩



கம் - நம் தலைவி மகிழப் பல வேறு வகையினவாய செல்வங்களை ஈட் டித் தருவோம்;

௯-கச. புரி இணர் மெல் அவிழ் அம் சினை புலம்ப - வலம் சுரிந்த பூங்கொத்துக்கள் மெல்லென மலர்கின்ற அழகிய கொம்புகள் அப் பூக்களை யிழந்து தனிமையுற, வல்லோன் கோடு அறை கொம் பின் - பூக்கொள்ள வல்லோன் மரக் கொம்பினை அடித்து அசைக்கும் கோல் போல, மராஅம் வீ உகத் தீண்டி அலைத்த மணவாய்த் தென் றல் - மராமரத்தை மலர்கள் உதிரத் தாக்கி அலைக்கும் மணத்தைத் தன்னிடத்துடைய தென்றல், சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் - சுரநெறியிற் செல்லும் வீரர்களது குழன்ற மயிரில் அம் மலர்களைச் சொரியும், என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் - வெம்மை நிலை பெற்ற புல்லிய இடத்தையுடைய ஊர்களில்,

கரு-உ௩. பருந்து இளைப்படும் பாறு தலை ஓமை - பருந்து ஈன்று காவற்படும் சிதறிய தலையினவாய ஓமை மரங்களையுடைய, இருங்கல் விடரகத்து - பெரிய மலையின் முழைஞ்சினிடத்து, ஈன்று இளைப்பட்ட - ஈன்று காவற்பட்ட, மென் புனிற்று அம் பிணவு பசித் தென - மென்மையும் ஈன்ற அண்மையும் உடைய அழகிய பெண் நாய் பசித்ததாக, பைங்கட் செந்நாய் ஏற்றை - பசிய கண்களை யுடைய செந்நாய் ஏறு, கேழல் தாக்க - ஆண் பன்றியினைத் தாக்க, இரியல் பிணவல் தீண்டலின் - அது கண்டு அஞ்சியோடும் பெண் பன்றி மோதிச் செல்லுதலின், பைங்குலை ஈந்தின் பரீஇ உதிர்ந்த செங்காய் பரல் - பசிய குலைகளையுடைய ஈந்தினின்றும் அறுபட்டு உதிர்ந்த செங்காய்களின் வித்துக்களுடன் கூடிய, மண் சுவல முரண் நிலம் - மண்மேடாகிய வன்னிலத்தை, உடைத்த - உடைத்திட்ட, வல் வாய்க் கணிச்சி - வலிய வாயினை யுடைய குந்தாலியை யுடைய, கூழ் ஆர் கூவலர் - கூழினை யுண்ணும் கிணறு வெட்டுவோர், ஊறாது இட்ட உவலைக் கூவல் - அகழ்ந்து பார்த்தும் நீர் ஊறாமையின் விட் டேகிய தழை மூடிய கிணறுகளை,

உச-எ. இருங் களிற்று இன நிரை- பெரிய களிற்றினமாகிய கூட்டம், வெண்கோடு நயந்த அன்பு இல் கானவர் - தமது வெள்ளிய கொம்பினைக் கவர விரும்பிய இரக்கமற்ற வேடர்கள், இகழ்ந்து இயங்கு இயவின் - தீங்கில்லை என்று நினைத்துக் கருத்தின்றிச் செல் லும் நெறிகளில், அகழ்ந்த குழி செத்து - தங்களை அகப்படுத்த அகழ்ந்து மறைத்த குழிகளாகக் கருதி, தூர்க்கும் - அவற்றைத் தூர்க்கும், பெருங்கல் அத்தம் விலங்கிய காடு - பெரிய கற்களை யுடைய நெறிகள் குறுக்கிடும் இக் காட்டிற் சேறற்கு (ஈண்டு நின் றும் மீளாது),

க. இனி வல்லே எழு - இப்பொழுது விரைந்து எழுந்து என் பின்னே வருவாயாக.

(முடிபு) நெஞ்சே! மடந்தை நலம் புலம்ப, சேய் நாட்டுச் செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாது அமைந்து போந்தனையாகலின் மனை நக வெறுக்கை தருகம் ஈண்டு நின்றும் மீளாது, காட்டிற் சேறற்கு இப்பொழுது எழுவாயாக.