பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடவுள் வாழ்த்து


மழுவு மூவாய்வேலும் ஏந்திய கையினனாய் யாவர்க்குத் தோலாதோனுமாய் ஏற்றினையு மூர்ந்து உமையாளையுஞ் சேர்ந்து செவ்வானன்ன மேனியையும் பிறை போன்ற எயிற்றினையும் எரி போன்ற சடையினையும் திங்களொடு சுடருஞ் சென்னியையு முடையனாய் மூவா அமரர் முதலிய யாவரு மறியாத் தொன்முறை மரபினனாய்ப் புலியதளையுமுடுத்த யாழ்கெழு மணிமிடற் றந்தணனது சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று எனப் பொருள் உரைக்குங் காலத்து அதன்கண் இடைக்கிடந்த சொற்கள் முன்னொடு பின் வாய்பாடுகள் சேராவன்றே; அவ்வழி அவ்வாய்பாட்டாற் போந்த பொருளுரைப்பச் சேர்ந்தவாறும் இசைதிரிந் திசைத்தவாறும் அவை தத்தம் நிலையிற் குலையாமை நின்று பொருள்பட்ட வாறுங் கண்டு கொள்க' என்றுரைத்தனர் இளம் 1. 'வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே' என்னும் சூத்திர வுரையில், இச் செய்யுளை எடுத்துக் காட்டி இ்ஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது என்றார் பேரா.


-------




1. தொல். செய்யு. ௧௦௧.