பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



௬௮

அகநானூறு

[பாட்டு


(சொ - ள்.) உ. தோழி--,

க-உ. மெய்யில் தீரா மேவரு காமமொடு - ஒருவர் மெய்யினின்றும் ஒருவர் மெய் நீங்காதவாறு பொருந்திய காமத்தால், எய்யாய் ஆயினும் உரைப்பல் - நீ அறியாய் ஆயினும் (அதனால் வரும் ஏதத்தினை) நான் உரைப்பேன் கேட்பாயாக;

௩-௮. அருவி ஆன்ற பைங்கால் தோறும் - நீர் இல்லையான பசிய முதல்தோறும், தினை குரல் வார்பு - தினைகதிர் முதிரப் பெற்று, கொய்யா முன்னும் - கொய்வதன் முன்னும், பல இருவி தோன்றின - பலவும் தட்டைகளாகத் தோன்றின, நீயே - நீதான், முருகு முரண் கொள்ளும் தேம் பாய் கண்ணி - வேறுபட்ட பல மணங்களும் கமழும் தேன் ஒழுகும் கண்ணியையுடையனான, பரியல் நாயொடு பல்மலை படரும் வேட்டுவற் பெறலோடு அமைந்தனை - விரைந்தோடும் நாய்களுடன் பல மலைகளையுங் கடந்து செல்லும் வேட்டுவனை எய்துமளவில் அமைந்தனை;

அ-கக. நின் பூ கெழு தொடலை நுடங்க எழுந்தெழுந்து - நின் பூக்கள் பொருந்திய மாலை யசைய அடிக்கடி எழுந்து சென்று, கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி - கிளிகளை ஓட்டும் தெளிந்த ஓசைகளை இடையிடையே (பலகாலும்) எழுப்பி, ஆங்கு ஆங்கு ஒழுகாய் ஆயின் - அங்கங்கே சென்று வாராதொழியின்,

கக-௩. அன்னை இவள் சிறுகிளி கடிதல் தேற்றாள் என - நம் அன்னை. சிறிய கிளியை இவள் ஓட்டுதலை யறியாளென எண்ணி, பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின் - தினை காத்தற்குப் பிறரைக் கொணர்ந்து நிறுத்துவளாயின்,

கச. அவன் மலர்ந்த மார்பு உறற்கு அரிது ஆகும் - தலைவனது பரந்த மார்பு பின் நீ அடைதற் கரியதாகும்.

(முடிபு) தோழி! காமத்தால் நீ எய்யாயாயினும் உரைப்பல் ; தினை கொய்யா முன்னும் பைங்கால்தோறும் இருவி பல தோன்றின ; நீயே வேட்டுவற் பெறலோ டமைந்தனை. நின் தொடலை நுடங்க எழுந்து விளி பயிற்றி ஒழுகாயாயின், அன்னை கிளி கடிதல் தேற்றாளென பிறர்த் தந்து நிறுக்குவளாயின் அவன் மார்பு உறற் கரிதாம்.

(வி - ரை.) தினை குரல் வார்பு கொய்யா முன்னும் பைங்கால் தோறும் இருவி தோன்றின என்க. அருவி - அருவி நீர். ஆன்ற- அகன்ற; இல்லையான. இருவி - கதிர் ஒழிந்த தட்டை . மாறுபட்ட பல பூக்களால் பல நாற்றமா யிருத்தலின் முருகு முரண்கொள்ளு மென்றார். கண்ணியை யுடைய வேட்டுவன், படரும் வேட்டுவன் என்க. தலைவனையே நினைந்து காத்தலைக் கை விடுத்தமையின் கிளிகள் கவர இருவியாயின. இடை இடை - அவற்றின் ஓசைக்கு இடையிடையே எனலுமாம்; இரண்டோசைகட்கும் வேற்றுமை யில்லை என்றபடி. ஆங்காங்கு - அப்படி அப்படியே என்றுமாம் ; கிளியோட்டுவது போன்று நடித்தலுஞ் செய்யாயாயின் என்றவாறு.