பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

களிற்றியானை நிரை

௬௯

 (மே - ள்.) 1'நாற்றமும் தோற்றமும்' என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது வரையும் பருவம் அன்றெனக் கூறியது என்பர் நச்.


29. பாலை

[வினைமுற்றி மீண்ட தலைமகன் எம்மையும் நினைத்தறிதிரோ என்ற தலைமகட்குச் சொல்லியது.]



தொடங்குவினை தவிரா அசைவில் நோன்தாள்
கிடந்துயிர் மறுகுவ தாயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த
தாழ்வில் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச்

ரு) செய்வினைக் ககன்ற காலை எஃகுற்
றிருவே றாகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக் காண்தொறும்
மேவல் தண்டா மகிழ்நோக் குண்கண்
நினையாது கழிந்த வைகல் எனைய தூஉம்

க0) வாழலென் யானெனத் தேற்றிப் பன்மாண்
தாழக் கூறிய தகைசால் நன்மொழி
மறந்தனிர் போறிர் எம்மெனச் சிறந்தநின்
எயிறுகெழு துவர்வாய் இன்னகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை கேளினி

கரு) வெம்மை தண்டா எரியுகு பறந்தலைக்
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங் கறியாது தேர்மருங் கோடி *
அறுநீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கரும் கடத்திடை

௨௦) எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு
நாணுத்தளை யாக வைகி மாண்வினைக்
குடம்பாண் டொழிந்தமை அல்லதை
மடங்கெழு நெஞ்சம் நின்னுழை யதுவே.

- -2வெள்ளாடியனார்.


(சொ - ள்.) ரு - கக. எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போல - கத்தியால் அறுக்கப் பிளவாகிய விளங்கும் வனப்பினையுடைய மாவின் நறிய வடுப்போல, காண்தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண் கண் - காணுந் தொறும் களிப்பு மேவுதல் குறையாத பார்வையினையுடைய மையுண்ட கண்களை, நினையாது கழிந்த வைகல் - நினையாது ஒழிந்த நாளில், எனையதூஉம் வாழலென் யான் எனத் தேற்றி - யான் சிறி


1. தொல். கள. உ௩. (பாடம் ) 2. வெண் வட்டியார். வேளாவட்டனன்.