௭௨
அகநானூறு
[பாட்டு
போக்கும் ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ - உப்பினைச் செலுத்தும் உப்பு வாணிகர் அரிய துறைகளிற் செலுத்தும், சகடுகளிற் பூட்டப்பெற்ற வலிய எருதுகளை யொப்பக் கூடி, அயிர் திணி அடை கரை ஒலிப்ப வாங்கி - நுண்மணல் செறிந்த பக்கத்துள்ள கரையில் ஆரவாரம் பெருக இழுத்து, பெருங்களம் தொகுத்த உழவர் போல. பெரிய களத்திலே நெல்லைத் தொகுத்த உழவர்களைப் போன்று, இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி - தம்மிடம் வந்து இரந்தோர்களுடைய வறிய கலன்கள் நிறைய அம் மீன்களைச் சொரிந்து, பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றி - எஞ்சியவற்றைப் பல கூறுகளாகச் செய்து விலை கூறி விற்று, கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவகரை உயர்ந்த திண்ணிய மணற்பரப்பில் தூங்கும் துறைவனே,
கஉ-ரு, ஒருநாள் -, மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண் நறுங்கானல் வந்து - தூய்மை செய்யப்பெறாத முத்துக்கள் அரும்பி யிருக்கும் புன்னை மரங்களையுடைய தண்ணிய நறிய கடற்கரைச் சோலையில் வந்து, நும் வண்ணம் எவனோ என் றனிர் செலின் - நுங்கள் மேனியின் வண்ணம் எத்தகையதோ என்று வினாவிச் செல்லின்,
கஉ. பெருமை என்பது கெடுமோ - நின் பெருமை என்பது கெட்டுப் போமோ?
(முடிபு) பரத மாக்கள் கிளையுடன் துவன்றிப் பகடொப்பக் குழீஇ, அடை கரை ஒலிப்ப வாங்கி உழவர் போல வறுங்கலம் மல்க வீசிக் கொள்ளை சாற்றி மணலிற்றுஞ்சும் துறைவ! ஒரு நாள் கானல் வந்து நும் வண்ணம் எவனோ என்றனிர் செலின் பெருமை என்பது கெடுமோ?
(வி - ரை.) இன மீன்-இனம்-வகை ; கூட்டமுமாம். தொகுத்த வற்றை வறுங்கலம் மல்க வீசுதல் என்னும் தொழில் பற்றியதாகலின் உழவர்போல என்றது தொழில் உவமம். பாடு-கூறு. பெருமை என்பது நீர் பெருமை என்று நினைக்கும் அது. மண்ணா முத்தம் - கழு வப்படாத முத்து; என்றது, புன்னை யரும்பு; இது வெளிப்படை. 'வண்ணம் எவனோ என்றனிர் செலினே' என்றது, வண்ணம் அழிவு படுதலைக் குறித்தற்கு.
(உ - றை.) 'பெருங்கடலுட் சிக்கிக் கிடக்கின்ற மீனை நுளையர் அதனினின்றும் நீக்கி உயிர் செகுத்துக் கண்டாரெல்லார்க்குங் கூறுவைத் துப்பரப்பிப் பின்பு உயிர் வருத்தினோமென்னும் இரக்கமின்றி, மணற்குன் றிலே உறங்கினாற் போல, பெருங்குலத்துப் பிறந்த இவளை நீயிர் நும் வசமாக நீக்கி வருத்தி, வேறுபாட்டான் எல்லாரும் இவளைச் சூழும்படி அலராக்கிப் பின்பு நீர் துயரமின்றி உறங்குகின்றீர் என்றவாறு.'
(மே - ள்.) 1'நாற்றமும் தோற்றமும்' என்னும் சூத்திரத்து 'வந்த கிழ வனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணம் குறித்த காலையும்' என்ற பகுதிக்கு, இச் செய்யுளை உதாரணமாகக் காட்டி, இதனால், ' தம்மால் இடையூ
1. தொல். களவு. உ௩.