௭௪
அகநானூறு
[பாட்டு
விரமாலை யிடூஉக் கழிந்தன்ன - செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்து கிடந்தாலொப்ப, நிண வரி - நிண ஒழுங்கும், புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் - புண் சொரியும் குருதியும் தம்மைச் சூழக் கிடந்தோரது, கண் உமிழ் - கண்ணைக் கவர்ந்து சென்று உமிழ்ந்து கொடுக்கும், கழுகின் கானம் நீந்தி - கழுகுகளையுடைய காட்டைத் தாண்டி,
கஉ-௫. வில் அலைத்து வென்றியொடு உண்ணும் வல்லாண் வாழ்க்கை - விற்போரில் பகைவர்களை அழித்து அவ் வெற்றியா லெய்தும் திறைப் பொருள்களைத் துய்க்கும் வலிய ஆண்மை பொருந்திய வாழ்க்கையினையுடைய, தமிழ்கெழு மூவர் காக்கும் - தமிழ் நாட்டினையாளும் மூவராலும் காக்கப்பெறும், மொழி பெயர் தேஎத்த பன்மலை யிறந்து - வேற்று மொழியினையுடைய தேயங்களிலுள்ள பல மலைகளையுங் கடந்து, சென்றார் என்பு இலர் - தலைவர் சென்றார் என்று கூறுதல் இலர் ; (இவள் பிரிவாற்றாது வருந்துகின்றாளென்று என்னையே குறை கூறுகின்றனர்.)
(முடிபு) தோழி! மண்டிலம் தெறுதலின் மன்னுயிர் மடிந்த அமையத்து, யாஅத்து மேற்கவட்டிருந்த பார்ப்பினங்கட்கு (உணவாகக்) குருதி பரிப்பக் கிடந்தோரது கண்களைக் கொண்டு சென்று உமிழும் கழுகுகளையுடைய கானம் நீத்திப் பன்மலையிறந்து தலைவர் சென்றார் என்பு இலர். அமையத்துச் சென்றார் என்க.
(வி-ரை.) புலக்கடை, புலங்கடையென விகாரமாயிற்று. நிலம் புடை பெயர்வது - உலகம் அழியும் ஊழிக்காலம்; 1'நிலம்புடை பெயர் வதாயினும்' எனப் புறநானூற்றில் வருவதுங் காண்க. இல : குறிப்புமுற்று எச்சமாயிற்று. பார்ப்பு, பறப்பவற்றின் இளமைப் பெயர். நிண வரியும் குருதியும் பரிப்பக் கிடந்தோர் என்க. கழுகின் கானம், உருபும் பொருளும் தொக்கன. என்பு-என்றல் ; தொழிற் பெயர். மூவர் காக்கும் தமிழ் மொழியின் வேறாய மொழி வழங்கும் தேயம் என்றுமாம்.
[(1) பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. (2) தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉமாம்.]
நெருநல் எல்லை யேனல் தோன்றித்
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச்
௫) சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண்
குளிர்கொள் தட்டை மதனில புடையாச்
சூரர மகளிரின் நின்ற நீமற்
1. புறம். ௩ச.