பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



34

களிற்றியானை நிரை

௭௯



இருதிரி மருப்பின் அண்ணல் இரலை

ரு) செறியிலைப் பதவின் செங்கோல் மென்குரல்
மறியாடு மருங்கின் மடப்பிணை யருத்தித்
தெள்ளறல் தழீஇய வார்மணல் அடைகரை
மெல்கிடு கவுள துஞ்சுபுறங் காக்கும்
பெருந்தகைக் குடைந்த நெஞ்சம் ஏமுறச்

க0) செல்க தேரே நல்வலம் பெறுந
பசைகொல் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி
துறைவிட் டன்ன தூமயி ரெகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்
செந்தார்ப் பைங்கிளி முன்கை யேந்தி
 
கரு) இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாணலம் பெறவே.

--மதுரை மருதன் இளநாகனார்.


(சொ - ள்.) க- ௯. சிறு கரும் பிடவின் - சிறிய கரிய பிடாவின், வெண் தலை குறும் புதல் - வெள்ளிய உச்சியினையுடைய குறிய புதர், கண்ணியின் மலரும் - மாலை போல மலரும், தண் நறும் புறவில் - குளிர்ந்த நறிய முல்லை நிலத்தில், தொடுதோல் கானவன் - செருப்பு அணிந்த தாளை யுடைய வேட்டுவன், கவை பொறுத்தன்ன - கவைக் கோலைச் சுமந்தாலொத்த, இரு திரி மருப்பின் - பெரிய முறுக்குடைய கோட்டினை யுடைய, அண்ணல் இரலை - பெருமை தங் கிய ஆண்மான்கள், செறி இலைப் பதவின் செங்கோல் மென் குரல் - நெருங்கிய இலைகளை யுடைய அறுகினது சிவந்த தண்டினோடு மெல் லிய கொத்துக்களை, மறி ஆடு மருங்கின் மடப்பிணை அருத்தி - மறி விளையாடும் பக்கத்தினை யுடைய இளைய பெண்மானை அருந்தச் செய்து, தெள் அறல் தழீ இய வார்மணல் அடைகரை - தெளிந்த அறல் நீர் தழுவிச் செல்லும் நெடிய மணல் சார்ந்த கரைகளில், மெல்கிடு கவுள - அசைவிடும் கவுளினையுடையவாய், துஞ்சு புறம் காக்கும் - அவை துயிலும் இடத்தைக் காவல் செய்திருக்கும், பெருந் தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற - பெருந்தன்மையினைக் கண்டு அவை போலத் தலையளி செய்திலமே என்று தளர்ந்த நெஞ்சம் இன்பம் அடையவும்,

கக-அ. பசை கொல் மெல்விரல் - ஆடைகளிலே தோய்ந்துள்ள கஞ்சிப் பசையினைக் கரைத்து விடும் மெல்லிய விரல்களையும், பெருந் தோள் புலைத்தி - பெரிய தோள்களையும் உடைய ஆடை ஒலிப்பவள், துறைவிட்டன்ன - அக் கஞ்சிப் பசையினைத் துறையில் அலசி விடுவது போன்ற, தூ மயிர் எகினம் - தூய மயிரினையுடைய அன்னங்கள், துணையொடு திளைக்கும் - தம் பெடைகளுடன் விளையாடி மகிழும், காப்புடை வரைப்பின் - காவல் பொருந்திய மனை எல்லைக்குள், செந்தார்ப் பைங்கிளி - சிவந்த மாலை யணிந்தது