பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



௮௮

அகநானூறு

[பாட்டு


(சொ - ள்.) க-௫. வான் தோய் வெற்பன் - வானளாவிய மலையையுடைய நம் தலைவன், விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன் - விரிந்த கொத்துக்களையுடைய வேங்கைப் பூவினாலாய வண்டுகள் மொய்க்கும் கண்ணியையுடையனாய், தெரி இதழ்க் குவளத் தேம் பாய் தாரன் - ஆய்ந்தெடுத்த இதழ்களையுடைய குவளைப் பூவினாலாய தேன் பாயும் தாரையுடையனாய், அம் சிலை இடவதாக - அழகிய வில் இடப்பக்கத் திருப்ப, வெம் செலல் கணை வலம் தெரிந்து - கடிய செலவினையுடைய வலியமைந்த அம்புகளை ஆராய்ந்தெடுத்துக் கொண்டு, துணை படர்ந்து உள்ளி - தலைவி நினைந்து வருந்த, வருதல் வாய்வது - இங்கு வருதல் மெய்ம்மை;

௬-அ. வந்தனன் ஆயின் - அங்ஙனம் வரின், அம் தளிர்ச் செயலை - அழகிய தளிர்களையுடைய அசோகினது, தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த - தாழ்தல் இல்லாது ஓங்கிய கிளையில் தொடுத்த, வீழ் கயிற்று ஊசல் மாறிய மருங்கும் - தொடங்கும் கயிற்றினாலாய ஊசல் இல்லாதொழிந்த இடத்தையும்,

அ-கரு. பாய்பு உடன் ஆடாமையின் கலுழ்பு இல தேறி - ஒருங்கு பாய்ந்து விளையாடாமையின் கலங்குதல் இலவாய்த் தெளிந்து, நீடு இதழ் தலை இய கவின்பெறு நீலம் - நீடிய இதழ்கள் பொருந்திய அழகிய நீலப் பூக்கள், கண் என மலர்ந்த சுனையும் - கண் போல மலர்ந்த சுனையையும், வண்பறை மடக்கிளி - அழகிய சிறகினையுடைய இளைய கிளி, எடுத்தல் செல்லாத் தடக்குரல் குலவுப் பொறை - தூக்கிச் செல்ல இயலாத பெரிய கதிராகிய வளைந்த பாரத்தை, இறுத்த கோல் தலை இருவி - முறித்த கோலாகிய தலையையுடைய தட்டைகள் பொருந்திய, கொய்து ஒழி புனமும் நோக்கி - கொய் தொழிந்த வறும் புனத்தையும் நோக்கி, நெடிது நினைந்து பைதலன் பெயரலன் கொல்லோ - நீள நினைந்து துன்புற்றவனாய்ப் பெயரலாகாது வருந்துவன் அன்றே; -

கசு - அ. அய வெள் அருவி சூடிய உயர்வரை - சுனையி னின்றும் வரும் வெள்ளிய அருவிகளை உச்சியிற் கொண்ட உயர்ந்த மலையில், கூஉம் கண்ணது எம் ஊரென - கூப்பிடு தூரத்திலுள்ளதே எம் ஊரென, ஆங்கு அதை அறிவுறல் யான் மறந்திசின் - அத் தலைவனைப் பிரிந்தவிடத்து அதனை அறிவுறுத்தலை யான் மறந்தேன், ஐ தேய்கு - அதனால் அழகு கெடுவேனாக.

(முடிய) வான்றோய் வெற்பன் வருதல் வாய்வது; வந்தனனாயின் ஊசல் மாறிய மருங்கும் நீலம் மலர்ந்த சுனையும் கொய்தொழிபுனமும் நோக்கி நெடிது நினைந்து பைதலன் பெயரலன் கொல்லோ; யான் ஆங்குக் கூஉங் கண்ணஃது எம் ஊரென அதை அறிவுறல் மறத்திசின்; ஐ தேய்கு.

வெற்பன் கண்ணியன் தாரனாய்ச் சிலை இடவதாகக் கணை தெரிந்து, உள்ள, வருதல் வாய்வது என்க.

(வி - ரை.) சங்கச் செய்யுட்களில் வேங்கைமலரில் வண்டு படு மெனக் கூறியிருக்கவும், திவாகர பிங்கல நிகண்டுகள் சண்பகமும்