பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 123


பொருட்குப் புணர்தலினும், அதனால் தலவியைப் பிரிதலினும் எனவும் கொள்க. மா - கருமை. மாயோள் - கரியோள்; அல்லது மாயோளான சக்தி போன்றவள் எனலும் ஆம்; அவள் தன் தலைவனுடன் பிரியா நிலையிலே உடற்பாதியாய் உறைந்தமையும் நினைக்க -

விளக்கம்: பரணர் செங்குட்டுவனைப் பாடியவர்; கொல்லிமலையிலே கடவுள் எழுதிய பாவையைப் பொறையன் அமைத்ததைக் கூறுகிறார். சிலம்பிலே கண்ணகிக்குப் படிமம் அமைத்த செய்தியையும் இங்கே நினைத்துக் காண்க. இதனால் கல்லிலே கடவுளின் வடிவம் சமைத்து அமைக்கும் கற்படிமக்கலை அன்றே சிறந்திருந்தமையும் அறிக.

63. கன்று காணாக் கறவை!

பாடியவர்: கருவூர்க் கண்ணம் புல்லனார். திணை: பாலை, துறை: தலைமகள் புணர்ந்துடன் செல்லச், செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.

(தலைமகள் உடன் போக்கிலே தன் காதலனுடன் சென்று விட்டனள். அதனால் உள்ளம் நொந்தாள் செவிலித்தாய். தன் மகளிடம் சொல்லிப் புலம்புகின்றாள். அவன் தோள்களே. துணையாகத் துயில்வித்தாலும் உறங்காது, பறையொலி கேட்டால் நடுங்கி மெலிவாளோ? என்று கலங்குகின்றாள்.)

கேளாய் வாழியோ மகளை! நின்தோழி,
திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு -
பெருமலை இறந்தது நோவேன்; நோவல் -
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி,

முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி
5


பெரும்புலர், விடியல் விரிந்து,வெயில் எறிப்பக்
கருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்.

கன்று காணாது, புன்கண்ண, செவிசாய்த்து,
10

மன்றுநிறை பைதல் கூறப், பலஉடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறுர் எல்லியின் அசைஇ,
முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை,

மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை
15


தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்,
வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்