பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

அகநானூறு - களிற்றியானை நிரை


          வினைவயின் பெயர்க்குந் தானைப்
          புனைதார், வேந்தன் பாசறை யேமே!

“முரசுகள் முழங்குவதுபோல இடிகள் முழங்குகின்றன. அச்சந்தரும் அழகிய வானவில்லும் மலையுச்சியிலே தோன்றுகிறது. மேகங்கள் கடல்நீரை முகந்துகொண்டு, வலனாக எழுந்து, உலகினையே வளைத்துக் கொண்டுள்ளன. வானினின்று வீழும் பெருமழையானது, திசையெல்லாம் மறைய அடைத்துப் பொழிகின்றது. அதனால், பெரிய நிலப்பரப்பானது, கண்ணுக்கு இனிதாகப் பொலிவு பெற்று விளங்குகிறது. இத்தகைய கார் காலத்திலே,

நெருப்புக் கங்குகளைப்போல விளங்கும், சிறுத்த கண்களையுடையது பன்றி. அது, துண் மணலின் கண்ணுள்ள சிறு தூறினிடத்தே கிடந்து தூங்கும். அதன் முதுகு மறையுமாறு, நறுமணமிக்க முல்லையினின்றும், அதனுடைய புதிய பூக்கள் உதிரும். காட்டைச் சார்ந்திருந்த, அரிய முனைகளையுடைய நெறியிலேயுள்ள, அச்சிறிய ஊரினிடத்தே, ஒளிபொருந்திய, நெற்றியினை உடையவளான நம் தலைவியும், நம்மைப் பிரிந்து வருந்துபவளாக உள்ளனள்.

நெல்லரிவோர், நெருப்புப் போன்ற பல வயல்மலர்களையும் மாறுபட வைத்து வலித்துக் கட்டிய, அசையும் பக்கங்களையுடைய கதிர்க்கட்டுகளைக், கள்ளினை உண்டு களித்திருக்கும் களமரின் களந்தோறும், கொண்டு போவர். அத்தகைய மருத நிலம் சூழ்ந்துள்ளதும், கொடிகள் அசைந்து பரப்பதுமாகிய இவ்வரிய ஊரினை, இதன்கண் உள்ளவர் அரிய திறைப் பொருள்களைக் கொடுத்துப் பணிய முன் வந்தும், நம் அரசன் ஏற்றுக் கொள்ளாதானாயினான். சினமிகுந்தவனாகச் சேனைகளை மென்மேலும் போரின் கண்ணேயே செலுத்துகின்றான். மார்பிலே தாரினைப் புனைந்திருக்கும், அத்தகைய நம் வேந்தனின் பாசறையினிடத்திலே, நாமோ இங்கே இருக்கின்ற வராயுள்ளோம்! (என்ன செய்வோம்?)

சொற்பொருள்: 1. குலைஇய-வளைந்த, உருகெழு. அச்சந்தரும், 5. ஏமம்-காவல் 10. புறவு-சிறுகாடு. 1. எரிபுரை மலர்தாமரை, செங்கழுநீர் போல்வன. பிறழ என்றது, அரிகதிர்களைத் தலைமாற்றிக் கட்டும்போது இலையும் பிறழ்ந்து தோன்று மாதலால் வாங்கி-வலித்து. 14 எயில்.ஊர் கோட்டையுமாம். 10. 'சீறுரோர் ஒண்ணுதல்’ எனத் துதுபோக விடுத்தற்குத் தன் வருத்தம் தோன்றக் கூறியது. புனைதார் வேந்தன், பாடியவர் மதுரை எழுத்தாளனார். ஆதலால், வேப்பந்தாரானான பாண்டியனே என்று கருதலாம்; தார் பாண்டியனுக்கே உரியது!