பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 191


அதிரல் பரந்த அம்தண் பாதிரி
உதிர்வீ அம்சினை தாஅய், எதிர்வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்

நன்றே, கானம்; நயவரும் அம்ம,
10


'கண்டிசின் வாழியோ - குறுமகள்! நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,
பிடிமிடை களிற்றின் தோன்றும்

குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தோர்
15

எம் குறுமகளே! நீ வாழ்வாயாக!

வாள்போலும் கோடுகளையுடைய வலிய புலியினது கொல்லும் நகத்தைப்போல, முள் நிறைந்த முருக்க மரத்தின் சிவந்த முனைகள் இதழ் விரிந்தன. அவற்றில் வண்டு மொய்க்க, வாடிய பூக்கள் கீழே உதிர்ந்தன. கதிர்த்த எழிலையும், மாண்புள்ள அணியினையுமுடைய மகளிரது;" "பூணிட்டு விளங்கும் முலையினைப்போல், 'முகைகள் அலர்ந்த கோங்கின் பூக்களோடு, கொத்துக்களாகிய புனலிப் பூக்களும், கூடிக் கலந்துகிடந்தன.

பரவிய அழகிய தண்மையான பாதிரியினது, அழகிய கிளையினின்றும் உதிர்ந்த பூக்களோடு தாவி மாறுபட்ட பூக்கள், மீண்டும் வெண்கடப்பம் - பூக்களோடு - விரவித்தாவின. பரவுக்கடன் பூண்ட அணங்குடைய கோயிலினிடத்தே கலந்து கிடக்கும் பூக்களைப்போல, இக்காடும், நல்ல அழகுடன், நமக்கு விருப்பமூட்டுவதாகத் திகழ்கின்றதனையும் காண்பாயாக,

மற்றும், நின் தந்தை பகைவரை அடும் போர்க்களத்துப் பாய்ந்து, தன் பூண்சிதைந்த கோட்டினை உடையவும் பிடிகள் சூழப் பெற்றனவுமாகிய களிறுகளைப் போலத் தோன்றும், சிறியவும் பெரியவுமாகிய அளவினையுடைய குன்றங்களையும் இஃது உடைத்தாயிருக்கின்றது! அதனையும் காண்பாயாக!

சொற்பொருள்: 1. வாள் வரி - ஒள்ளிய கோடும் ஆம். கோள் உகிர் - இரையைக் கொன்று குருதியிலே தோய்ந்த உகிரும் ஆகும். 3. மதர் எழில் - மதர்த்த எழில். பூரித்துப் பொங்கும் அழகு 6. அதிரல் - புனலிப்பூ. 9. அணங்கு - தெய்வம். 10. நயவரும் - விருப்பந்தரும். 11. குறுமகள் - இளைய நங்கை . 12. அடுகளம் - போர்க்களம். தொடி - களிற்று மருப்பின் பூண். 14-15. பிடிமிடை களிற்றில் தோன்றும் குறுநெடுந் துணைய குன்றம் - பிடி போற் குறுமையும், களிறுபோல் நெடுமையும் கொண்டு அடுத் தடுத்தாக நெருங்கியிருக்கும் பலவாகிய குன்றங்கள் என்க.