பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

அகநானூறு - களிற்றியானை நிரை



விளக்கம்: “நுந்தை அடுகளம் பாய்ந்த' என்றதால், உடன்போக்கிலே சென்றவள் குறுநில மன்னன் மகள் என்றும், அவன் அரச குலத்து இளைஞன் எனவும் உணரலாம்.

100. நாரை ஒலித்தன்ன அம்பல்!

பாடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல், துறை: தோழி வரைவு கடாயது. சிறப்பு: புறந்தைப் பெரியன்.

(இரவுக்குறி வந்து, கூடிப் பிரியும் தலைவனிடம், தோழி, ஊரலர் எழுந்ததையும், அதனால் தலைவி இற் செறிக்கப்படுவாள் என்பதையும் கூறி, அவனை விரைந்து வந்து தலைவியை வரைந்து மணந்து கொள்ளத் தூண்டுகின்றாள்.)

          அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்,
          புரையப் பூண்ட கோதை மார்பினை,
          நல்லகம் வடுக்கொள முயங்கி,நீ வந்து,
          எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே!
          பெருந்திரை முழக்கமொடு இயக்கு.அவிந் திருந்த 5

          கொண்டல் இரவின் இருங்கடன் மடுத்த
          கொழுமீன் கொள்பவர் இருள்நீங்கு ஒண்சுடர்
          ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
          ஆடுஇயல் யானை அணிமுகத்து அசைத்த
          ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும் 10

          பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்,
          பரியுடை நற்றேர்ப் பெரியன், விரிஇணர்ப்
          புன்னைஅம் கானற் புறந்தை முன்துறை
          வம்ப நாரை இனன்ஒலித் தன்ன
          அம்பல் வாய்த்த தெய்ய தண்புலர் 15

          வைகுறு விடியற் போகிய எருமை
          நெய்தல்அம் புதுமலர் மாந்தும்
          கைதைஅம் படப்பைளம் அழுங்கல் ஊரே!

நறுமணம் கூட்டி அரைக்கப்பெற்று அமைந்த சந்தனத் தைப் பூசி, உயர்வறமாலையினைப் பூண்ட மார்பினையுடையவனாக, நீ இரவினிலே வந்து, நினது நல்ல மார்பகம் வடுக்கொள்ளுமாறு எம் தலைவியை முயங்கிப், பின்னர்ப் பெயர்ந்து போகுதல், எமக்கும் மிக இனிதேயாகும். ஆனால்,

பெரிய கடலானது, தனது முழக்கத்துடன் அலைகளின் அசைவும் ஒய்ந்து கிடந்த, மேகஞ் சூழ்ந்த இரவிலே, கரிய கடலிலே மடுத்த கொழுவிய மீனைக் கொணர்பவர், தம் படகு முனையிலே கட்டியிருக்கும் இருள்நீங்குதற்குக் காரணமாகிய