பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

அகநானூறு -களிற்றியானை நிரை



(தலைவன் இரவுக் குறியும் பகற்குறியும் பெற இயலாதவ னாயினான். இற்செறிப்பினால் தலைவியும் பிரிவாற்றாது நொந்தாள். இந்நிலையிலே, தன்னுடன் தலைவியை உடன்போக்கிலே கொண்டுபோக விரும்புவதாகத் தோழி மூலம் தகவல் அனுப்புகிறான். தோழி அவனிடம் மீண்டு வந்து, தலைவியின் இசைவைச் சொல்லுகிறாள்.)

          நீசெலவு அயரக் கேட்டொறும், பலநினைந்து,
          அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறைமெலிந்த
          என்அகத்து இடும்பை களைமார், நின்னொடு
          கருங்கல் வியல்அறைக் கிடப்பி, வயிறுதின்று
          இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல் 5

          நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
          ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஒராங்கு
          ஆன்நிலைப் பள்ளி அளைசெய்து அட்ட
          வால்நிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு
          புகர்அரைத் தேக்கின் அகல்இலை மாந்தும் 10

          கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்
          வல்லாண் அருமுனை நீந்தி, அல்லாந்து,
          உகுமண்ஊறு அஞ்சும் ஒருகாற் பட்டத்து
          இன்னா ஏற்றத்து இழுக்கி,முடம் கூர்ந்து,
          ஒருதனித்து ஒழிந்த உரனுடை நோன்பகடு 15

          அம்குழை இருப்பை அறைவாய் வான்புழல்
          புல்உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
          மரைகடிந்து ஊட்டும் வரையகச் சீறுர்
          மாலை இன்துணை ஆகிக், கர்லைப்
          பசுநனை நறுவிப் பரூஉப்பரல் உறைப்ப, 2O

          மணமனை கமழும் கானம்
          துணைஈர் ஒதிஎன் தோழியும் வருமே!

"நீ அவளையும் உடன் கொண்டு செல்வதனை விரும்பியதைக் கேட்குந்தோறும், நின்பால் அன்பினையுடைய தன் நெஞ்சத்திலே பலப்பலவும் நினைந்து, வருத்தத்தைத் தாங்குதலால் மெலிந்துபோன, என்னிடத்துற்ற துன்பத்தினை நீக்கும் பொருட்டாக,

கருங்கல்லான அகன்ற பாறையினிடத்தே, பெரிய புலியானது, தன் வயிறு நிறையத் தின்றுவிட்டுக் கைவிட்டுப் போன மானேற்றின் காய்ந்த தசையை, வழிச்செல்பவர்களாகிய புதியவர்கள் கண்டு மகிழ்வர். அவ்விடத்தே, தழைத்த மூங்கில்