பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 207


மேகங்கள் தவழும், அத்தகைய உச்சிகளையுடைய மலைக்கு உரியவன், நம் தலைவன்.

பாறைகளின் முகட்டிலே முத்துக்கள் சிதறிக் கிடப்பதைப் போல, யானைகளின் முகம் புள்ளிகளுடன் விளங்கும். அவற்றிலே மோதி வீழ்ந்த புதிய ஆலங்கட்டிகள், பளிங்கினைச் சொரிந்து வைத்தாற்போலப் பாறைகளை அழகு செய்யும். மேகங்கள் சினந்து எழுந்த இடமகன்ற வானிலே, பொறிவிடுகின்ற கொள்ளியினைப்போல மின்னல்கள் ஒழுங்குபடத் தோன்றும். படுமழை பொரிந்த அக்காலத்து நள்ளிரவிலே, அரிய உயிர்ப்பொருளாகிய உணவினையுடைய கொல்லும் விலங்குகள் திரிந்துகொண்டிருக்கும் இருளிடையே, நாடோறும் தனியாக வருதலினாலே, அவன், நமக்கு யாதும் அருள்பவனே யல்லன்.

தம்மைப் புணர்ந்தோரின் துன்பங்களைப் போக்கி அருளு தலும், அறிவுடையவர்களுக்குப் பொருத்தம் உடையதாகுமே! நம் தலைவன் அங்ங்ணம் செய்யாததுதான் என்னையோ, தோழி?

சொற்பொருள்: 1. புன்கண் - துன்பம். உணர்ந்தோர் - உணர்ந்த அறிவுடையோர். 5. வரிப்ப - கோலம் செய்ய. 6. கார் - கார்மேகம். கதம்பட்ட சினந்து முழங்கிய. 7. நெகிழி - கொள்ளி. கொடிபட ஒழுங்குபட 9. ஆருயிர்த் துப்பின் கோண்மா - ஆருயிர்களையே தமக்கு உணவாகக் கொன்று தின்னும் கொடு விலங்குகள். 15. அலங்குகுலை - அசையும் குலை. 17. கையாடு வட்டில் கழங்காடு காய். 18 மையாடு சென்னி - மேகந் தவழும் மலைமுகடுகள்.

உள்ளுறை: மயிலுக்கு அஞ்சிப் பாம்பு படம் விரித்தாற் போலக் காந்தள் மலர் இதழ்விரியும் என்றது, விருப்பந்தரும் தலைவனின் வருகையும், அவன் வருகின்ற சூழ்நிலை காரணமாக அச்சந் தருவதாயிற்று' என்றதாம்.

109. அறனில் வேந்தன்!

பாடியவர்: கடுந்தொடைக்காவினார். திணை: பாலை துறை: இடைச்சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தலைவியைப் பிரிந்து வினைமேற் சென்றனன் ஒரு தலைவன். பல காடுகளையும் கடந்து சென்றபின் அவன் நினைவு தலைவியின்பாற் சென்றது. அங்கிருந்து, அவள் இருக்கும் ஊரைத் தன் மனக்கண்முன் கொண்டுவருகிறான். அப்போதுதான், அவன் கடந்துவந்த காட்டின் கொடுமை, அவனுக்குத் தோன்றுகிறது)

பல்இதழ் மென்மலர் உண்கண், நல்யாழ்
நரம்புஇசைத் தன்ன இன்தீம் கிளவி,