பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 211



111. புண் தேர் விளக்கு!

பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ திணை: பாலை, துறை: தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகனை ஆற்றுவித்தது.

(தலைமகன் பொருளார்வமுற்றுத் தலைவியைப் பிரிந்து சென்றனன். அதனால் கலக்கமுற்று வாடி மெலிந்த தலைவிக்கு, அவன் விரைய வருவான் எனக் கூறித்தேறுதல் கூறுகிறாள் தோழி)

உள்ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச்சொல் நாணி
வருவர் வாழி, தோழி! அரச
யானை கொண்ட துகிற்கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி 5

ஒடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர
மழைஎன மருண்ட மம்மர் பலஉடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங்கை
தொகுசொற் கோடியர் தும்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற்கோள் 10
  
செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக்,
குருதி ஆரும் எருவைச் செஞ்செவி,
மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண்தேர் விளக்கின், தோன்றும்
விண்தோய் பிறங்கல் மலைஇறந் தோரே! 15

தோழி! நீ வாழ்வாயாக!

தமக்கு வாய்த்த செல்வம், உள்ள அளவிலே அதனை நுகர்ந்து, மகிழ்வுடன் வாழ்தல் இலராக, அதனைப் பொறுக்காத பகைவர் சிலர், இகழ்ச்சியாகப் பேசும் உள்ளத்துடன் கூறுகின்ற, அம்பு போலும் கொடுஞ்சொற்களுக்கு நாணினவராயினார்.

பட்டத்து யானையானது, தன்மேற் கொண்டிருக்கின்ற துகிற் கொடியினைப் போல, ஓடை என்னும் குன்றத்தேயுள்ள. காய்ந்த தலையினையுள்ள ஞெமை மரத்தின்மீது, சிலம்பியானது வலையினைப் பின்னியது. மேற்காற்றால், அவ்வலையும் அசைந்து கொண்டிருந்தது.

அதனை மேகம் எனக் கருதி, ஒருங்கே மருட்சியுற்றன மயக்கத்தினையுடைய இளைத்த களிறுகள் பலவும். வருத்தத்தை யுடையனவாக அவை உயர்த்த நெடுங்கைகள், புகழினைத் திரட்டிக் கூறும் கூத்தரது தூம்பினைப்போலத் தோன்றி ஒலிக்கும். அத்தகைய காட்டிலுள்ள செந்நாயின் ஏற்றையானது, தன் இரையினை நன்கு பற்றிக் கொள்ளும் திறனுடையது. அஃது,