பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 215


சேயர் என்றலின், சிறுமை உற்றென்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் - பராரை
அலங்கல் அம்சினைக் குடம்பை புல்லெனப் -
புலம்பெயர் மருங்கிற் புள்ளழுந் தாங்கு, 25

மெய்இவண் ஒழியப் போகி,அவர் -
செய்வினை மருங்கிற் செலீஇயர்,என் உயிரே!



நன்மை அல்லாமற் போய்க், கேடே வந்துற்ற காலையினும், தம்முடைய நட்புத் தன்மையிலே நின்றும் கோணாதவர்கள், அந் நட்பினர்பால் சென்று, அவர் வழிப்பட்டிருக்கும் உள்ளத்திலே, திரிபில்லாத அறிவுடைமையுடையவர்கள். கூத்தர்களைப் புறக்கும் பெருமகனாய், அவர்கட்குப் புல்லிய தலையினையுடைய இளைய பிடியானைகளை, அமரின்கண் அளிக்கும் வண்மை யாலாகிய மகிழ்வுடையவனாக விளங்கிய, அஃதை என்பானைப் பாதுகாத்து, அவனைக் காவல் மிகுந்த இடத்திலே நிலைநிறுத்திய, பல வேற்படையினை யுடையவர்கள், கோசர்கள்.

அவர்களது, புதிய கள் கமழும்; நெய்தலஞ்செறு வென்னும், வளம் பொருந்திய நல்ல நாட்டைப் போன்ற, என் தோளினைக் கூடி, ஆரவாரமுடைய பழைய ஊர் அலர் எடுத்து அரற்றவும், நமக்கு அருளாது, நம்மைக் கைவிட்டுப் போயினர், நம் காதலர்.

எந்நாளும் கல்லைப் பொருது, மெலிவுறாத, இனிய வலிய அடியினையுடையவனும், மிக்க வலிய மூங்கிற் குழாயிலே பெய்த உணவினை உடையவனும், தன் நாட்டெல்லையைக் கடந்து தொலைவிலுள்ளதே யாயினும், கவரும் செவ்வி பார்த்துப், பகைவர் ஆக்களைப் பாதுகாத்து உறையும் உணவுமிக்க அரண்களிலே சென்று, திரண்ட திமிலையுடைய ஏறுகளுடன் கூடிய பகைப்புலத்து ஆக்களைக் கவர்ந்து செலுத்துபவனும், செறிந்த கரிய பூணையும் நெய் கனிந்த தண்டையுமுடைய நீண்ட வேலினையும், விழாச் செய்தாலொத்த கொழுமையாகிய பலப்பல உணவுகளையுமுடையவனுமாகிய, பகைவர்க்குப் புறமுதுகிடாத, பாணன் என்பானது, நல்ல ந்ாட்டிற்கு அப்பாற்பட்ட, வழியிலே செல்லும் புதியவர்களைக் கொன்ற ஆறலைப் போராகிய கள்வர்கள், தாங்கள் எறிந்த படைக்கலங்களைக் கழுவிய, சிவந்த நிறமுடைய, அரித்தோடும் சின்னிரையுடைய, மக்களியக்கம் அற்ற, நுண்மணல் பொருந்திய கரையினைத் தாண்டிச் சென்று அவர் தொலைவிடத்தே யுள்ளனர். இப்படிப் பலரும் சொல்லுவதனால், நோயுற்றுச் செயலற்ற என் நெஞ்சத்தின் துயரங்கள் நீங்குமாறு,

பருத்த அடிமரத்திலே கிளைத்த, அசையும் அழகிய கிளையிலேயுள்ள தன் கூடானது தனித்து ஒழியத், தான்