பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 219


பிறையினையொத்தாற் போல வளைந்த, வெண்மையான கோட்டினையுடைய தலைமையான யானையானது, சினமிக்க ஆற்றலையுடைய சிங்கத்திற்கு அஞ்சித் தன் இனத்தை ஒருசேர அழைத்துக் கொண்டு மறைந்திருக்கும்; அத்தகைய, அச்சம் விளைவிக்கும் கவர்ந்த நெறிகளிலே,

நன்றாகிய, நம்முடைய ஆராயத்தக்க அழகனைத்தும் தொலையு மாறு, நம்மைக் கைவிட்டுப் பிரிந்து, தொலைவிலுள்ள நாட்டி னிடத்தே சென்ற நம் தலைவர், அவ்விடத்தே வாழுதற்குக் காரண மாகிய பொருளின்மீதுள்ள பற்றானது, உரிய காலத்தில் நிறைவு ராமையினர்ற் போலும், காலம் நீட்டித்திருப்பவராயினர். அத்தகைய நம் காதலர், அவ்விடத்தே, என்றும் நோயின்றியே இருப்பாராக!

சொற்பொருள்: 5. நுண்பூண் எருமை - எருமைக் கொம்புகளை அறுத்து இடப்பட்ட பூண் எனக் கொள்ளின் நுண்பூண் எருமைகளையுடைய மருதவளம் மிக்க குடநாடு என்க. அன்றி, எருமை குறுநிலத் தலைவன் பெயராகக் கொள்ளின் நுண்பூன் எருமையின் குடநாடு என்க. இதே மாமூலனார் குடநாட்டு வேந்தனாகக் குட்டுவனை முன்னர்க் குறிப்பிடலால், எருமைகள் மலிந்த குடநாடே பொருத்தமாவதாகும். 14. சினமிகு முன்பின் வாமான் அஞ்சி எனக் கொண்டு, சினமிக்க வலிமையையும், தாவும் குதிரைகளையுமுடைய அஞ்சி என்பான் எனவும் உரைப்பர். அஞ்சி மழவர் கோமான். மழவர் ஆநிரைக்கவர்தலை மற்றும் செய்யுட்களிலும் காணலாம்.

'நம்மை அறனன்றித் துறத்தலின் தீங்கு வருமென்று அஞ்சி வாழ்த்தியது' என்பர், நச்சினார்க்கினியர்.

உள்ளுறை : தம்மை இன்புறுத்திய எவ்வியின் துயர் கண்டு வெதும்பிய, பாணர்க்குள்ள உள்ளங்கூடத் தலைவனிடம் இல்லை; இனம்பேணும் களிற்றின் பாசம்கூட அவனிடம் இல்லை; அவன் வாழ்க!' என வாழ்த்தினள்!

116. புனல் அயர்ந்தனை என்ப!

பாடியவர்: பரணர் திணை: மருதம். துறை: தோழி தலைமகனை வாயில் மறுத்தது. சிறப்பு: செழியன் இயற்றிய கூடற் பறந்தலைப் போர். -

'தலைவி, பிறர் அலர் கூறியவழிக் காமஞ்சிறந்து புலந்த வாறு என்று, நச்சினார்க்கினியர் கூறுவர்.

(பரத்தையுடன் புனல் விளையாட்டு அயர்ந்து வீடு திரும்பினான் தலைவன். தலைவியோ ஊடி நின்றாள். தோழிமூலம் அவன் ஊடலைத் தீர்க்க முயல, அவள், அவன் செயலைப் பழித்துக்கூறி, வாயில் மறுத்து உரைக்கின்றாள்.)