பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 245


அவன் செல்வக்கடுங்கோவின் மகனாதலின் பெருங்கடுங்கோ என அழைக்கப்பட்டிருத்தலும் சாலும். அங்ஙணமாயின், இவனிருந்த கருவூர் இன்றைய திருச்சி மாவட்டத்துக் கருவூரே எனலாம்.

பெருங்குன்றுள் கிழார் (8)

வேளாளர் மரபினராகிய இவர், பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தைப் பாடிச் சேரமான் குடக்கோச்சேரல் இரும் பொறையினிடம் பெரும் பரிசில் பெற்றவர். வையாவிக் கோப்பெரும் பேகனிடம் அவன் மனைவிக்கு அருளுமாறு வேண்டியவர்களுள் இவரும் ஒருவர். நற். 4, பதிற்றுப்பத்துள் 8ஆம் பத்து, அகநானூறு 1, புறம் 3, ஆகியன இவர் பாடியவை. சிறு மேதாவியார், சேந்தம் பூதனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார், நக்கீரர், பரணர் ஆகியோர் காலத்தவர்.

பெருந்தலைச் சாத்தனார் (13)

மற்றும் அகநானூற்றுள் ஒரு பாடலும், நற்றிணையுள் ஒன்றும், புறநானூற்றுள் ஆறு பாடல்களும் இவர் பாடியவை, தென்னவன் மறவனான கோடைப்பொருநன் பண்ணி என்பான், இளங்கண்டீரக்கோ, குமணன், கடிய நெடுவேட்டுவன், மூவன் ஆகியோர் இவரால் பாடப் பெற்றோராவர். இளவிச்சிக் கோவானவன் நன்னன் உறவினனாகலின் அவனைத் தழுவாது, அவனுடனிருந்த நள்ளியின் தம்பியாகிய இளங்கண்டீரக் கோவை மட்டும் தழுவியர். வறுமைத் துயரால் இவர் குடும்பம் பட்ட அல்லல், 'ஆடுநனி மறந்த' என்று தொடங்கும் புறநனூற்றுப் பாடலால் புலனாகும். வாள் தந்தனனே தலையெனக்கீய எனத் தலைசிறந்த குமணவள்ளலின் வள்ளன்மையைப் போற்றியவர். அவனுக்கும் அவனுடைய தம்பிக்கும் இடையிலேயிருந்த மனவேறுபாடுகளைத் தீர்த்தற்குக் காரணமாக உதவியவரும் இவரே என்பர். சீத்தலைச் சாத்தனாரினும் வேறுபடுத்திக்கூற இவர் பெருந்தலைச் சாத்தனார் எனப் பட்டனர்.'பெருந்தலை' என்ற சொல்லுக்கு நாட்டாண்மைக்காரன் என்பது பொருள். இவர் ஆவூர் மூலங்கிழாரின் மகனார் எனவும் கூறப்படுவர்.

பெருந்தேவனார் (கடவுள் வாழ்த்தும், 51-ம்)

இவர் தொண்டைநாட்டு வேளாண் மரபினர். பாரதக் கதையைத் தமிழில் முதலிற் பாடியவர். அச்செய்யுட்கள் சில பழைய உரை நூல்களுள் மேற்கோள்களாகக் காணப் பெறும்.ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய தொகை நூற்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர். அதனால், தொகையாசிரியர்கள் காலத்து இருந்தவர் இவர்

எனலாம். நற்றிணை 83-வது பாடலும், குறுந்தொகை 225-வது

17