பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 63


அவ்விடத்தே வினவிவிட்டுச் சென்றாயானால், நின் பெருமை தான் என்னகெட்டுவிடுமோ!

சொற்பொருள்: 2. பாடு - பெருமை. 6. ஒழுகை - சகடம், "வண்டி 10. பாடு - கூறு.15. வண்ணம் கேட்கில், வரைவர் என்பது கருத்து. புன்னை அரும்பிய என்றதனால், பகற்குறி இடையீடு கூறியது.

உள்ளுறை பொருள்: (1) நுளையா பெருங்கடலுள் கிடந்த மீனை நீக்கி, அதன் உயிரைக்கொண்டு, பலருக்கும் வழங்கி, உயிரை வருத்தினோம் என்ற எண்ணமே சிறிதும் இல்லாமல், மணற்பரப்பிலே கிடந்து உறங்குவர். அது போலப், பெருங்குலத்துப் பிறந்த இவளை, உன் வசமாக அவர்கள் குடும்பத்தினின்றும் நீக்கி வருத்தி, அதனால் அவள் கொண்ட வேறுபாட்டால் பலரும் அவளைத் தூற்றுமாறு அலராக்கி, வரைந்துகொள்ள முற்படாமல் நீயோ வாளா நின்றனை!

(2) களத்துக்கண் வருபவருக்கு இல்லை யென்னாது வாரி வழங்கும் உழவர்போல, நின் நாட்டுப் பரதவரும் இனமீனை வாரிவழங்குவர். யாம் நின்னை வேண்டியும், நீ எமக்கு இரங்கி அருளினாயில்லை.

(3) இவர்களால் அவன் ஏங்கி நலியவும், அதனை அவன்பாலே குற்றஞ்சாட்டியவராகக் கூறுதலால், மாயஞ் செப்பியதற்கு இஃது உதாரணமாயிற்று.

31. சென்றார் என்பிலர்!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை துறை: பிரிவிடை ஆற்றாள் ஆயினாள் என்று, பிறர் சொல்லக் கேட்டு வேறுபட்ட தலைமகள், தோழிக்குச் சொல்லியது.

(பிரிந்து வேற்றுநாடு சென்றான் தலைவன். அவள் பிரிவினால் நலிந்து உடல் மெலிந்தாள். பிரிவினால் இவள், இப்படி ஆயினள்' என்று கண்ட பலரும் பழி சொல்லினர். அதனைத் தலைவி கேட்டாள், ‘என்னைக் குறைகூறுகின்றனரே அல்லாமல் யான் இங்ஙனம் தவிக்கப் பிரிந்து போன அவரைக் குறை கூறுகின்றனர் இலரே எனத் தன் தோழியிடம் கூறி வருந்துகிறாள்.)

          நெருப்புஎனச் சிவந்த உருப்பு.அவிர் மண்டிலம்
          புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
          'நிலம்புடை பெயர்வது அன்றுகொல், இன்று?"என
          மன்உயிர் மடிந்து மழைமாறு அமையத்து,
          இலைஇல ஓங்கிய நிலைஉயர் யாஅத்து 5