பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அகநானூறு - மணிமிடை பவளம்


        குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி,
        நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த 5

        கேட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டைப்
        பார்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
        கணவன் ஓம்பும் கானலஞ் சேர்ப்பன்
        முள்ளுறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
        வாவுஉடை மையின் வள்பிற் காட்டி, 10

        ஏத்தொழில் நவின்ற எழில்நடைப் புரவி
        செழுநீர்த் தண்கழி நீந்தலின், ஆழி
        நுதிமுகங் குறைந்த பொதிமுகிழ் நெய்தல்,
        பாம்புஉயர் தலையின் சாம்புவன நிவப்ப,
        இரவந் தன்றால் திண்தேர்: கரவாது 15

        ஒல்லென ஒலிக்கும்.இளையரொடு வல்லாய்
        அரவச் சீறுர் காணப்
        பகல்வந் தன்றால் பாய்பரி சிறந்தே.

நிறைந்த சூலினை உடையதான ஆமையானது, மணல் மேட்டிலே மறைவாக ஈன்று புதைத்ததும், யானைக் கொம்பினாலே செய்த வட்டினைப் போன்ற உருவுடன் விளங்குவதும், புலால் நாற்றம் கொண்டிருப்பதுமான முட்டையினை, அதன் இடத்திலேயிருந்தும் குஞ்சு வெளிப்படுகின்ற வரையிலும், திறந்த வாயினையுடைய அந்த ஆமையின் கணவனானது பேணிக் கொண்டிருக்கிற, கானற்சோலைக்கு உரியவன் நம் தலைவனாகிய சேர்ப்பன்.

அவனுடைய திண்மையினையுடைய தேரானது, தாற்றுக் கோலின் முள்ளால் குத்தப்பட்டால் குதிரைகள் வேகமாக ஓடிப் பலரும் அறியச் செய்துவிடலும் கூடுமென அஞ்சிக், கடிவாள வாயினை இழுத்து மெல்லச்செலுத்தப்பட்டு, அம்பின் விரைவினைப் போலச் செல்லும் தொழிலிலே சிறப்புடைய அழகிய நடையினையுடைய அக் குதிரைகள், செழுமையான நீரினையுடைய தண்மையான கழியினை நீந்துதலால், அத் தேர் உருளைகளின் கூர்மையான முனையால் அறுக்கப்பெற்றுப் பொதிந்த அரும்புகளையுடைய நெய்தலானது, பாம்பின் உயரே தூக்கிய தலையினைப்போல வாடி மேலேஎழ இதுகாறும் இரவுவேளையிலேயே வந்துகொண்டிருந்தது.

இப்போதோ, அடும்பின் கொடிகள் சிதையுமாறு அவற்றை வலித்து இழுத்துக் கொணர்ந்து, வளைந்த கழியிடத்து உயர்ந்த வெண்மையான மணல்மேட்டின் பக்கமாகச் சேர்த்தவாறே,