பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அகநானூறு - மணிமிடை பவளம்


        விளிவுஇடன் அறியா வான்உமிழ் நடுநாள்,
        அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப்,
        பனிமயங்கு அசைவளி அலைப்பத், தந்தை
        நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக;
        அறல்என அவிரும் கூந்தல் மலர்என 10

        வாண்முகத்து அலமரும் மா.இதழ் மழைக்கண்,
        முகைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்;
        நகைமாண்டு இலங்கும் நலம்கெழு துவர்வாய்க்,
        கோல்அமை விழுத்தொடி விளங்க வீசிக்,
        கால்உறு தளிரின் நடுங்கி ஆனாது, 15
        
        நோய்அசா வீட முயங்கினன்-வாய்மொழி
        நல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
        நசைபிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
        கோள்அறவு அறியாப் பயம்கெழு பலவின்
        வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, 20

        வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்
        களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர
        ஒளிறுவன இழிதரும் உயர்ந்துதோன்று அருவி
        நேர்கொள் நெடுவரைக் கவா அன்
        சூரா மகளிரிற் பெறற்குஅரி யோளே. 20

கொள்ளக் குறையாதபடி சங்கினம் வளர்ந்து கொண்டிருக்கும், ஆழத்தையுடைமையால் அளத்தற்கு அரிதாயதும் திரண்ட கரிய தோற்றத்தினை உடையதும் ஆகிய கடலைக் கண்டாற்போல விளங்கும் அகன்ற வானிலே, அழற்கொடியினை எடுத்து உயர்த்ததுபோல மேகங்களைப் பிளந்துகொண்டு மின்னல்கள் பளிச்சிடக், கடுமையாக முழங்கும் இடியுடன் மிக்க நீர்த்துளிகளைச் சிதறி, முடிவிடம் இதுவென அறிய முடியாத வகையிலே, மேகம் மழைபொழிந்து கொண்டிருக்கின்ற கார்காலத்து நள்ளிரவிலே -

அரிய காத்தல் தொழிலினரான காவலர்கள் நெகிழ்ந்திருந்த பக்குவத்தைப் பார்த்து, குளிர்பொருந்திய அசைந்து வருகின்ற வாடைக் காற்றானது வருத்த, அவளுடைய தந்தையின் நீண்ட மாளிகையினுள் ஒருபுறத்தே சென்று நின்றேன்.

வாய்மை மொழிதலையும், தமக்கு வழங்கியோருக்கு நல்ல புகழைத் தருகின்ற இயல்பினையும் உடைய இரவலர்களுக்கு, அவர்கள் எண்ணிய ஆசைகள் பிழைபட்டுப் போதலையே அறியாத வள்ளன்மையினையும் உடையவன், வீரக்கழலும்