பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 103


தனித்துத் தங்கி இருப்போமோ? என்று, தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கினான் என்க.

சொற்பொருள்: 1. வயங்கு மணி - பளிங்கு மணி; விளக்கமான மணியும் ஆம் வகை கூறுபாடு 2 காழ் - சரம் மா அயோள் - மாமை நிறத்தை உடையவள். 3. வினை வனப்பு - செய்வினைத் திறனாற் கூடிய அழகு. புனைபூஞ் சேக்கை - அலங்கரித்த மலர் மஞ்சம், 4.நகர் - மாளிகை.7.சேக்குவம்-தங்கியிருப்போம். சாத்து எறிந்து - வாணிகச் சாத்தினைக் கொன்று அதர் கொள்ளைப் பொருள்ட 10. உலறிய வறட்சியுள்ள 12. வெரிந் முதுகு 15. எழுதணி கடவுள்-சுவரிலே கடவுள் வடிவை நினைந்து எழுதித் தொழப்பெற்று வருகின்ற கடவுள்; இன்றும் இந்த மரபுகளைச் சிற்றுார்களில் காணலாம். 17. பால் நாய் ஈன்று அணிமையுடைய நாய். 18. குயில் காழ் - குயிற்றப்பட்ட கைமரங்கள். அயில்வாய் - வேல்முனைபோன்ற 19, சிதலை - கறையான்.

உள்ளுறை: குடி போகப்பெற்றுப் பாழ்ப்பட்ட ஊரினைப் போல, தன்னைப் பிரிந்து தலைவியும் தன் அழகழிந்து வாடுவாள்; பீர்க்குப் படர்வதுபோல அவள் மேனியிலே பசலைநோயும் படரும்; எழுது அணி கடவுள் போனதுபோல, அவளுடைய அணங்குபோன்ற புனை எழிலும் மறையும்; என் றெல்லாம் ஒப்பிட்டு அவன் துயருற்றான் என்க. முதல் நாள் இரவின் இன்ப வாழ்வும் மறுநாளைய தனிமை வாழ்வும் மிகவும் நுட்பமாகக் காட்டப்பெற்றிருக்கின்ற தன்மையை அறிந்து இன்புறுக.

மேற்கோள்: ‘நெஞ்சினாற் பிரியக் கருதி வருந்திக் கூறியது’ என்பதற்குத், ‘தான் அவட் பிழைத்த நிலையின் கண்ணும்’ என்னும் பகுதியில், ‘கரணத்தின் அமைந்து’ என்னுங் கற்பியற் சூத்திர உரையில், நச்சினார்க்கினியர் இதனைக்காட்டினர்.

பாடபேதங்கள்: 12 உரிஞ்ச ஒல்கி. 14. மாடக் கெழுதணி. பானாய் துள்ளி பறைகட் சீறில்

168. பனி வார் கண்ணேம்!

பாடியவர்: கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான். திணை: குறிஞ்சி. துறை: இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது. சிறப்பு: குழுமூர் என்னுமிடத்திலே சேரமான் உதியன் இட்ட பெருஞ்சோற்றுக் கொடை பற்றிய செய்தி.

(தலைவன் இரவு நேரத்திலே வந்து தலைவியுடன் கூடி மகிழுகின்ற களவுவாழ்வினை மேற்கொண்டு ஒழுகி வருகின்றான்.