பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 111



சொற்பொருள்: 1. இவரும் படரும். 2. இறும்பு காடு 5. இனையல் வருந்தாதே, 7. அலந்தலை - வாடிய உச்சி அதர் வழி. 8. மால் வரை - பெரிய மலை.12.தாரம் - உணவுகள்; பண்டம். 15. எண்கு - கரடி

பாடபேதம்: 4. நினையும் மாதவர் பண்பு.

172. அன்பிலை யாகுதல் அறியேன்!

பாடியவர்: மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார். திணை: குறிஞ்சி. துறை: தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து தலைமகனை வரைவுகடாயது.

(தலைமகனும் தலைமகளும் இரவுக்குறியிடத்தே களவிற் கூடிவந்த காலம். பற்பல காரணங்களானும் இரவுக்குறி இடையீடுபடத் தலைவியின் வேதனை மிகுதியாயிற்று. ஒருநாள் தலைமகளைக் குறித்தஇடத்திலே விட்டுவிட்டு வருகின்ற தோழி, தன்னை எதிர்ப்பட்டு வரும், தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.)

        வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில்
        பிரசமொடு விரைஇய வயங்குவெள் அருவி
        இன்இசை இமிழ்இயம் கடுப்ப, இம்மெனக்
        கல்முகை விடர்.அகம் சிலம்ப, வீழும்
        காம்புதலை மணந்த ஓங்குமலைச் சாரல், 5

        இரும்புவடித் தன்ன கருங்கைக் கானவன்
        விரிமலர் மராஅம் பொருந்திக், கோல்தெரிந்து,
        வரிதுதல் யானை அருநிறந்து அழுத்தி,
        இகல்இடு முன்பின் வெண்கோடு கொண்டுதன்,
        புல்வேய், குரம்பை புலர ஊன்றி, 10

        முன்றில் நீடிய முழவுஉறழ் பலவின்
        பிழி.மகிழ் உவகையன், கிளையொடு கலிசிறந்து,
        சாந்த ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும்
        குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
        அறியேன் யான், அஃது அறிந்தனென் ஆயின்- 15

        அணி இழை, உண்கண், ஆய்இதழ்க் குறுமகள்
        மணி.ஏர் மாண்நலம் சிதையப்,
        பொன்னேர் பசலை பாவின்று மன்னே!

யானைகள் பலவும் நீராடியவாய் முழக்கமிட்டுக் முழக்க மிட்டுக் கொண்டிருக்கும், நீர்வளம் திகழ்கின்ற மலைச்சாரலிலே, தேனுடன் கலந்ததாக விளக்கமுற்ற வெண்மையான அருவிகளும் காணப்படும். இனிய இசையினை முழங்கும் மத்தள ஒலிபோல,