பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அகநானூறு - மணிமிடை பவளம்


அப்பெருமை என்றும் நிலைபெற்ற பெருமையாகும் என்று கூறி, அரசன் மனமுவந்து அளிக்கும் பொற்பூவினையும், அப்போது எழுகின்ற தண்ணுமை ஒலியினையும் விலக்கி, நாம் அவளை முதற்கண் அடைவதையே பெரிதாக நாடிச் செல்வோம்” என்பதை அவள்தான் அறியமாட்டாள்,

வேங்கை மரத்தினது முதிர்ந்துவிழும் நறுமண மலரைப் போல, மேனியானது நல்ல நிறத்தினைக்கொள்ள, மார்பிடத்தே அரும்பிய குற்றமற்ற தேமற்புள்ளிகளை உடையவளாய், நல்ல மணலையுடைய அகன்றவிடத்தே நடந்த சிலவாய மெல்லிய ஒதுக்கத்தினையுடைய மாமை நிறத்தினள் அவள். (பிரிவுவிடை கொண்டபோது, அவள் குறுக அடியிட்டுத் தளர்ந்து நடந்து சென்ற பழைய காட்சியின் நினைவு இது)

கீழ்த்திசை வானத்திலே எழுந்த கடுங்குரலோடு இடி முழங்கும் மழைமேகங்கள் நீரைச் சொரிந்து முழக்கமிடும் போதெல்லாம், நிரம்பிய கால்களிலே படர்ந்திருக்கும் முல்லையின் பழைய கொடியானது தளிர்க்க, அதனைக் கண்டதும், நம்மை நினைந்து, வெறுப்புற்ற மனத்தளாய்ச் செயலற்று ஒடுங்கி, மிக்க துன்பத்தினை எய்திய, பசலைபாய்ந்த மேனியளாக, அவள் என்ன நிலைமையினை அடைவாளோ நெஞ்சமே?

என்று, பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 2. ஒருபடை ஒப்பற்ற படைக்கலம். 3. நின்றன்று - நிலைபெற்றது. 4. பூக்கோள் - வெற்றிக்கு அடையாள மாக அளிக்கும் பொற்பூக்களைக் கொள்ளுதல். 6. நேர்கால் - நிரம்பிய கால்வாய்கள். காலைவானம் - கீழ்த்திசைவானம், 8. கையற்று - செயலற்று. பழங்கண் - துன்பம். 14 ஒதுக்கு ஒதுங்கி ஒதுங்கி நடக்கும் தளர்நடை

விளக்கம்: கோடையினாலே வாடிய முல்லையின் முது கொடிகுழைப்பக் காணும் அவள், பிரிவினால் வாடிய தன் மேனியும் அழகுறக் கார்காலம் வந்தும், யாம் வரக் காணாததால் வாடி மெலிந்து என்ன ஆவாளோ? என, ஏங்குகிறான் தலைவன்.

மேற்கோள்: மீள்வான் தன் நெஞ்சிற்கு உரைத்தது; இதனுள் ‘பூக்கோளேய தண்ணுமை விலக்கிச் செல்வேம்’ என்றலின், அரசனால் சிறப்புப்பெற்ற தலைவனாயிற்று’ என, ‘ஏவன் மரவின்’ என்னுஞ் சூத்திர உரையினும் -