பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

அகநானூறு - மணிமிடை பவளம்


எழுதிய, அவரால் வீழ்ந்துபட்டவர்களின் நடுகற்கள் நிலை பெற்றிருக்கும். அப்படிப்பட்ட கொடிய வழிகளையுடைய வான, குறும்பு செய்வோரின் பூசல்களை நீக்குவோரைக் கண்டறியாத சுர நெறியினைக் கடந்து, பொருள் தேடிவரச் செல்வதற்கு விரும்பினர். அங்ஙனமாயின், இனிமையான முறுவலினையும், மயிலிறகுக் குருத்துப்போன்ற திரண்ட முட்போலும் கூர்மையினை உடைய பற்களையும், சிவந்த வாயிதழ்களையும், குவளையின் புத்தம் புதிய மலரினைப் போன்ற மைதீற்றிய கண்களையும் உடைய இந்தமதிபோலும் ஒளிபொருந்திய நெற்றியினை உடையவள் வருத்தம் கொள்ளுவாள். அப்படி இவள் வருந்துமாறு, இவ்வூரினைவிட்டு நீங்கிப்போய் வேற்றுாரிலே தங்குதல் என்பது நுமக்குப் பொருந்துவதாகுமோ?

என்று, பிரிவுணர்த்திய தலைமகனுக்குத் தோழி செலவழுங்கச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. சிமையம் - மலையுச்சி. கவா அன் - பக்கமலை. 2. வெண்தேர் - பேய்த்தேர். கடம்காய் - காய்கடம்; காய்ந்த கற்காடு, 3. துனை - விரைவு. துன்னுதல் - அடைதல். 5. வான் வாய் - பெரிய வாய். 6. புலந்து கழியும் - வெறுத்து நீங்கிப் போகும். 7. விடுவாய் - விடுதல் வாய்ந்த, 8. நல்நிலை - நல்ல வெற்றியின் நிலையை. கல்-நடுகல். அதர வழியை உடையவான 9. அரம்பு - குறும்பு.1. முருந்து மயிலிறகுக் குருத்து.12. நாள் மலர் - அன்று மலர்ந்த புதிய மலர்.

விளக்கம்: காட்டின் ஏதமும், பிரிவால் தலைவி அடையும் துன்பமிகுதியும் கூறி, அவன் தகுதியையும் சுட்டிப் பேசி, அவன் போவதைத் தடுக்க முயல்கிறாள் தோழி, காட்டு வாழ்வுடைய தாகிய யானையும் அதனை வெறுததுச் செல்லும் நிலைமையைக் கூறியதன் மூலம், நாட்டு வாழ்வினனாகிய அவன் அதனை விரும்புதல் மிகத் தவறு என்பதும் கூறினாள்.

பாடபேதங்கள்: 5. வறள்வாய், 9. இரும்புகொள். 13. வாண்முகம்.

180. ஊரின் பேதைமை!

பாடியவர்: கருவூர்க் கண்ணம்பாளனார். திணை: நெய்தல். துறை: இரந்து பின்னின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப் புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியதுஉ மாம்.

(யாதோ ஒரு காரணம்பற்றித் தலைவி தலைவனோடு ஊடி இருக்கின்றனள். அவன் தோழிபால் தனக்கு உதவவேண்டு கின்றாள். அவனுக்குச் சாதகமாகத் தலைவியை இசைவிக்கச்