பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

அகநானூறு - மணிமிடை பவளம்


        வேட்டம் போகிய குறவன் காட்ட
        குளவித் தண்புதல் குருதியொடு துயல்வா,
        முளவுமாத் தொலைச்சும் குன்ற நாடே!
        அரவுஎறி உருமொடு ஒன்றிக் கால்வீழ்த்து
        உரவுமழை பொழிந்த பானாட் கங்குல், 10

        தனியை வந்த ஆறுநினைந்து அல்கலும்,
        பனியொடுகலுழும் இவள் கண்ணே; அதனால்,
        கடும்பகல் வருதல் வேண்டும்-தெய்ய
        அதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇ,
        உயர்சிமை நெடுங்கோட்டு உகள, உக்க 15

        கமழ்இதழ் அலரி தாஅய் வேலன்
        வெறிஅயர் வியன்களம் கடுக்கும்
        பெருவரை நண்ணிய சார லானே.

அழகிய தோற்றத்தையுடைய வேங்கைமரத்தின் பொன் போலும் பூங்கொத்துக்களைச் சூடிக்கொண்டான்; வளைந்த மூங்கிலினாலாகிய வலியமைந்த வில்லினைத் தோளிலே இட்டுக் கொண்டான்; இனிய பழத்தினையுடைய பலாவினது சுளையி னின்றும் ஆக்கிய கள்ளினைச் சீழ்க்கை ஒலியுடன் அம்பினைச் செலுத்தும் வீரர்களுடன் சேர்ந்து நிரப்பக் குடித்துக் கொண்டான்; விலங்குகளைத் துரத்தும் இயல்பிலே தப்புதல் இல்லாத வலியுடைய நாய்கள் பின்னாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்க வேட்டைமேற் சென்றான்; குறவன் ஒருவன். அவன், காட்டு மல்லிகையின் தண்மையான புதர் குருதியுடன் அசைந்தாடுமாறு, முள்ளம் பன்றியைக் கொன்று வீழ்த்துவான். அத்தகைய குன்றுகளையுடைய மலைநாடனே!

முன்னொரு சமயம், வலியுடைய மேகம், பாம்பினைத் தாக்கிக் கொல்லுகின்ற இடி முழக்கத்துடன் கூடியதாகக் காலிட்டுப் பெய்து மழையினைப் பொழிந்த இரவின் பாதிநாட்பொழுதிலே, நீ தனிமையாகி வந்த வழியின் துன்பத்தினை நினைந்து, அவள் கண்கள் நாள்தோறும் கலங்கி நீர் சொரிந்து அழுதுகொண்டே யிருக்கும்.

அதனால் அதிர்கின்ற குரலினையுடைய முதிய முசுக்கலையானது, மிளகுக் கொடியின் தளிரினைத் தின்று, அதனை வெறுத்து உயர்த்த உச்சியினையுடைய நீண்ட மலைமுடிகளிலே தாவிச் செல்லுதலால் உதிர்ந்த, மணங்கமழும் இதழினையுடைய பூக்களானவை எங்கும் பரந்து, வேலன் வெறியாடுவதற்கு இழைத்திருக்கும் பெரிய களத்தினைப் போலத் தோன்றும், பெரிய மலையினை அடுத்திருக்கின்ற அத்தகைய