பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 135


சாரலின் இடத்தே, இனி, நீ கடும்பகல் வேளையிலேயே வருதல் வேண்டும்.

என்று, தோழி இராவருவானை அதனை விட்டுப் பகலில் வருக என்றனள்.

சொற்பொருள்: 1. பூங்கண் வேங்கை - அழகிய இடத்தையுடைய வேங்கையுமாம். மிலைந்து - சூடி, 2. வாங்கு அமை - வளைந்த மூங்கில். நோன்மை - வலிமை. எருத்தம் - தோள். 4. விளை - சீழ்க்கை ஒலி.5. ஒட்டியல் - ஒடித்துரத்துகின்ற இயல்பு வயநாய் - வலியுடைய வேட்டைநாய். 2 வேட்டம் - வேட்டை 7. குளவி - மல்லிகை. புதல் - புதர். துயல்வர - அசைந்தாட 8. முளவுமா முள்ளம் பன்றி.13 கடும்பகல் நண்பகல் 24 கலைகுரங்கு வகையுள் ஒன்று; முசுக்கலை. 17. கடுக்கும் - போன்று விளங்கும்.

உள்ளுறை: வேட்டையாடுதலிற் சென்ற குறவன், முள்ளம் பன்றியை அம்பெய்து கொன்று தன்னுடைய செயலினைச் செய்தனனாக அதனால் காட்டுமல்லிகைப் புதர் குருதியுடன் அசைந்தாடிற்று. அங்ஙனமே, தலைவனும் களவாகிய ஒழுக்கத்தினையே மிகவும் விரும்பியவனாகத் தலைவியைக் கூடி வர, அதனால் தலைவியின் உடலின்கண் தோன்றிய மாற்றங்கள் தாய் முதலியோருக்கும் புலனாக, ஊரலர் எழலும் ஆயிற்று என்றனள்.

இதனால், பகற்குறி நேர்தலும் கூடாமையால் வரைவு வேட்டனள் என்றே கொள்க. மலைச்சாரல் வேலன் வெறியயர் களம்போலத் தோற்றும் என்றது, அன்னை முதலியோர் வேலனை வேண்டி வெறியாட்டயர்தலையும் தொடங்கினர் என்பதனைக் குறிப்பால் உணர்த்தும்.

பாடபேதம்: 1. பொன்னினர் மலைந்து,

183. வருந்துவோம் அல்லமோ!

பாடியவர்: கருவூர்க் கலிங்கத்தார். திணை: பாலை. துறை: தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(பிரிந்து சென்றவனாகிய தலைமகன், தான் மீண்டு வருவதாகக் குறித்த பருவம் வந்தும் வராதவனாக, அந்தப் பருவத்தின் வரவினைக் கண்டு, தன் உள்ளத்தின் துயரம் மிகுதியாகத் தலைவி தன் தோழியினிடம் இவ்வாறு கூறிப் புலம்புகின்றனள்.)