பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 137



என்று, தலைமகன் குறித்த பருவவரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. கலுழ்தல் - கலங்கி அழுதல், திருந்து இழை - திருந்திய அணி, மேகலை காஞ்சி போல்வன். 2. அவ்வரி - அழகிய இரேகைகள், 3. அழுவம் - பாலை 5. நீடலர் - நீட்டிக்கமாட்டார். பாடு ஆன்று - ஒலி மிகுந்து. 6. இறந்து கடந்து சொன்று. 7. குவவுத்திரை - வளைவு கொண்டு எழுகின்ற அலைகள். கொள்ளை - மிகுதியான கொள்ளுதல், 8. வயவுப்பிடி - சூல்கொண்ட பெண்யானை, வயின் வயின் இடந்தோறும். 9. துவன்றி - நெருங்கித் திரண்டு. 12. தண்டா நாற்றம் - அமையாத மணம்; அளவு கடந்த நறுமணம். 13. ஊதை - வாடை 14. பனி அலைக் கலங்கியநெஞ்சம் - துன்பம் அலைக்கழித்ததால் கலக்கமுற்ற நெஞ்சம்.

பாடபேதம்: 6 விரைந்து நீர் பருகி.

184. சிறக்க நின் ஆயுள்!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். திணை: முல்லை துறை: தலைமகன் வினை.வயிற் பிரிந்துவந்து எய்தியவிடத்துத் தோழி புல்லு மகிழ்வு உரைத்தது.

(தொழில்மேற் பிரிந்து சென்ற, தலைவன், தான் மேற்கொண்ட வினையினைச் செவ்வையாக முடித்த பெருமிதத் துடன் வீடு திரும்பிவிட்டான். அப்போது, அவனைப் பாராட்டி அவன் மனைவியின் தோழி, இவ்வாறு சொல்லுகின்றனள்)

        கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய
        புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
        நன்ன ராட்டிக்கு அன்றியும், எனக்கும்
        இனியஆ கின்றால், சிறக்க, நின் ஆயுள்!
        அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமோடு 5

        கரும்புஜிமிர் மலர கானம் பிற்பட,
        வெப்பிடவு அவிழ்ந்த பிகமழ் புறஅல்
        குண்டைக் கோட்ட குறுமுள் கன்விப்
        புள்தலை புதைத்த கொழுங்கொடி முல்cல
        ஆர்கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கித், 10

        தெள்அறல் பருகிய திரிமருப்பு எழிற்கலை
        புள்ளிஅம் பிணையொடு வதியும் ஆங்கண்,
        கோடுடைக் கையர், துளர்எறி வினைஞர்,