பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 141


என்பவனின் வளஞ்செறிந்த போஒர் என்னும் ஊரைப் பற்றிய செய்தி.

(தன்னுடைய தலைவன் பரத்தை ஒருத்தியோடு தொடர்பு உடையவனாயினான்; தன்னைப் பிரிந்து அவளுடைய வீட்டிலேயே தங்குதலும் செய்பவனானான் எனத் தலைவி ஒருத்தி நினைத்தாள். அவள் ஆற்றாமை சினமாக அந்தப் பரத்தையைப் பழிக்கும் அளவிற்குக் கொண்டுபோய்விட்டது. அந்தப்பரத்தையையும் கைவிட்டுப் புதியவள் ஒருத்தியுடன் அவன் தொடர்பு கொண்டு போய்விட அவளும் வாடியிருப்பவள். தன்னைத் தலைவி பழித்தது கேட்டு நொந்த அவள், தலைவியின் தோழிமார் கேட்குமாறு தன்னுடைய நிலைமையைக் கூறுகின்றாள்.)

        வானம் வேண்டா வறணில் வாழ்க்கை
        நோன்ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்
        மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
        நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகலிலை
        இருங்கயம் துளங்கக், கால்உறு தோறும் 5

        பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும். ஊரனொடு
        எழுந்த கெளவையோ பெரிதே; நட்பே,
        கொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப்
        புனல்ஆடு கேண்மை அனைத்தே அவனே,
        ஒண்தொடி மகளிர் பண்டையாழ் பாட, 10

        ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
        தண்நறுஞ் சாந்தம் கமழும் தோள்மணந்து,
        இன்னும் பிறள்வயி னானே, மனையோள்
        எம்மொடு புலக்கும் என்ப, வென்வேல்
        மாரி அம்பின், மழைத்தோற் பழையன் 15

        காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
        செறிவளை உடைத்தலோ இலனே; உரிதினின்
        யாம்தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
        திருதுதல் பசப்ப நீங்கும்
        கொழுநனும் சாலும், தன் உடன்உறை பகையே. 20

வலிமையான தூண்டிற் கயிற்றினை உடையவர் மீன் பிடித்து உண்பவரான வலைஞர்கள்; அவர்கள், மழைவளத்தை வேண்டிநிற்றல் இல்லாத, வறுமையற்ற வளமான வாழ்வையும் உடையவர். மீன்கள் நிறைந்துள்ள நீர்நிலைகளிலே தூண்டிலிட்டுத், தூண்டிலிலே மீன்பற்றியதை அறிந்து, தூண்டிற்