பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 143



சொற்பொருள்: 1. வானம் - மழை. வறன் - வறுமை. 2. நோன் - வலிமை. ஞாண் - தூண்டிற் கயிறு. கோள் - கொள்ளுதல்; தூண்டிலைக் கெளவிக் கொள்ளுதல். 3 முதிர் - மிகுதி. இலஞ்சி - நீர்நிலை. கலித்த - தழைத்த 5. துளங்க - அசைவுற்றுக் கலங்க. கால் - காற்று. உறுதல் - வீசி அடித்தல். 8. வேழப்புணை வேழக்கோலாலாகிய புணை. 10. பண்டையாழ் - பழைமையான சிறப்புடைய யாழ், ஈர்ந்தண் - மிக்க தண்மை. குணில் சிறுகொம்பு விதிர்ப்பு - அடித்து ஓசை எழச்சய்தல்.16. போஒர் - ஒர் ஊர். 17 செறிவளை உடைத்தல் - முன்கை பற்றிக் கூடுதலால் வளை உடைதல்.20 உடனுறைபகை-உடன் வாழும் நீங்காத பகை

உள்ளுறை: காற்று குளத்திலே வீச, அதனால் தாமரை இலைகள் அசைந்து வருந்துவதுபோலத் தலைவனின் பிரிவாலான வருத்தம் தலைவிக்கு எழ அதன் பயனாக இல்லிடைப் பரத்தையான தான், அவனால் தூற்றுதலுக்கு ஆட்பட நேர்ந்தது என்றாள். புணை துணையாக நீராடுவோம், தம் நீர் விளையாடல் முடிந்ததும், அதனைக் கரையிலேயே கைவிட்டுப் போய்விடுவர். அதுபோல, என்னைக் கூடிய அவனும், என்னை இங்கேயிருந்து தனித்து வருந்துமாறு விட்டுவிட்டு போயினான் என்றனள். அவன் உறவு அவ்வளவே என்றது, அவ்ளுடைய பிரிவினாலான ஏக்கத்தை உணர்த்துவதாம்.

விளக்கம்: உழுது பயன்கொள்வார்போல வானம் வேண்டாத வாழ்வினர் மீன்பிடிப்போர். வானம் வேண்டாதது, இயல்பாகவே மழைவளம் உடைமையாலும் ஆம். யாழிசையும் முழவொலியும் கூறியது.அவன் சேரிப் பரத்தையருடன் கூடிக் களித்திருக்கத்தான் வருத்தியிருப்பதை உணர்த்துவதற்காக. ‘வளை உடைத்தலோ, இலன்’ என்பதை அவள் கூற்றாகக் கொண்டால், ‘அவன் பிரிவினால் வெறுப்புற்று வளைகளை உடைத்தலும் செய்திலேன்; அதுபற்றியே தலைவி ஐயுற்று என்னை நோகின்றாள் போலும்? என உரைத்ததாகக் கொள்க “கொற்றவை கோயில் பொற்றொடி தகர்த்து’ என வரும் சிலம்பின் தொடரும், ‘உடைகவென் நேரிறை முன்கை வீங்கிய வளையே’ எனப் பின்னும் (அகம், 336) வருவதும், காதலரைப் பிரிந்த மகளிர் வளையுடைத்து வெறுப்பு மிகுதியால் வாடி நிற்றலை உணர்த்துவன.

பாடபேதங்கள்: 5. இருங்கயம் தயங்க. 10. மண்டை பாழ்பட 14. வெல்பரி. 17. உரிதினின் அயர்ந்த உரிதினின் ஆர்ந்த,