பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

அகநானூறு - மணிமிடை பவளம்


நிழல்; அறல்பட்ட நிழல். 7. திரங்கு - வாடிய, மரல் - கள்ளி வகையுள் ஒன்று: கையறு - வாட்டங்கொண்ட, தொகுநிலை - தொகுதியா யிருந்த நிலைமை.9. எடுத்தலின் - தாக்குதலால். 10. பூளை - ஒருவகைப் பூ கண்ணிற் பீழை எனத் தென்னாட்டுள் கூறப்படுவது. 12. ஆண்குரல் - ஆண்மை தோன்றும் குரல். அசைவின்று - நிலையாக, துரப்ப செலுத்த, 17 தடையின் வனைந்தனவாக. மன்னும் ஒத்திருக்கும். 19. இரும்பொன் - இரும்பும் ஆம் வாகை பெருந்துறை வாகைப் பறந்தலை எனவும் கூறப்படும். இதுவே, மணிவாசகர் காலத்துப் பெருந்துறை என்னும் துறைமுகமாக விளங்கியது என்பர் சிலர் இது மேலைக் கடற்கரையூர். 20. நன்னன் - கடம்பின் பெருவாயில் நன்னன் என்பவன்.

விளக்கம்: தான் இழந்த நாட்டை மீளவும் பெற்றதுடன், நன்னன் பிறரைவென்று சேமித்து வைத்திருந்த வளம் அனைத்தையும் பெற்றுச் சிறந்தவன் சேரன். அவனைப் போலத் தானும் திரண்ட செல்வம் பெறினும் என்றது, சேரன் பெற்ற பெருஞ் செல்வத்தின் மிகுதியை உரைத்ததாகும். வாகை, நன்னனின் காவன் மரம் எனவும், அதனைச் சேரமான் முழு முதல் தடித்தனன் எனவும் பதிற்றுப்பத்துக் கூறும்.

மேற்கோள்: 'களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல், இழந்த நாடு தந்தன்ன வளம் பெரிது பெறினும், வாரலென் யானே’ என்னும் தொடர்களை; 'இவை வன்புறை குறித்துச் செலவு அழுங்குதலின் பாலையாயிற்று’ எனச் செலவிடை அழுங்கல் செல்லாமையன்றே என்னும் சூத்திர உரையுள் நச்சினார்க்கினியர் காட்டிக் கூறுவர்.

பாடபேதங்கள்: 7. கையறு தொகை நிலை. 10. ஒய்யென வலறிய, 1. இன நிரை தேரிய 20 பொருளகத்து ஒழிய,

200. எமக்குச் சொல்வீராக!

பாடியவர்: உலோச்சனார்; நக்கீரன் எனவும் பாடம் திணை: நெய்தல். துறை: தலைமகன் குறிப்பறிந்த தோழி தலைமகற்குக் குறைநயப்பக் கூறியது.

(தலைமகன் ஒருவன் தலைமகள் ஒருத்திபாற் காதலுற்ற வனானான். தன் குறையை அவளுடைய தோழியிடம் கூறித் தலைவியைத் தனக்கு இசைவிக்க வேண்டி நின்றான். தோழியும் தலைமகளின் குறிப்பும் அவனுக்கு இசைவதாக இருப்பதனை அறிகிறாள். வந்து, அவனிடம் சொல்லுகிறாள்;)