பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

அகநானூறு - மணிமிடை பவளம்



அரசநெறியினை அறியாத எழினியும் களத்தின் முன்னணியிலேயே அகப்பட்டு வீழ்ந்துபட்டான். வீழ்ந்த அவனுடைய பல்லைப் பறித்து வந்து, மத்தி என்பவன் அழுத்தி வைத்த வன்மையான கதவினை உடையது வெண்மணிவாயில் என்னும் கோட்டை. அந்தக் கோட்டை வாயிலிலே, மத்தி நாட்டிய வெற்றிக்கல் விளங்கும் குளிர்ந்த நீர்த்துறையினிடத்தே, நீர் மோதி மோதி ஒலி செய்வதுபோன்ற, பெரிய ஊரலர் ஒன்றே, இப்போது நமக்கு எஞ்சியிருக்கின்றது. அத்துடன், நாம் அழுதுகொண்டே இருக்கவுமாக, நம்மைத் தனித்துவிட்டு நம் காதலர் பிரிந்தும் சென்றனர்.

பறையினைக் கண்டாற்போல விளங்கும் வட்டமான பெரிய வலிமையுடைய தாளினையும், திண்மை நிலைபெற்ற கொம்பினையும் உடைய வலிபொருந்திய களிறானது, வெண் கடம்பிலே சென்று உராயுந்தோறும், வெண்மையான சுண்ணாம்பு பரந்து கிடப்பதுபோலத் தோன்றும் கடம்பின் பூக்கள், குளிர்ந்த மழைக் காலத்திலே பெய்யும் பனியைப்போல உதிர்ந்து எங்கும் பரவும். உழவர்கள் காயவைத்திருக்கும் வெள்ளை நெல்லின் வித்துக்களைப்போல, அப்படி உதிர்ந்த பூக்கள், பாறையில் வீழ்ந்து காய்ந்து கிடக்கும். குளிர்ச்சி பொருந்திய அத்தகைய சோலைகளைக்கொண்ட, வேங்கடமலைக்கு அப்பாலிருக்கின்ற, வேற்றுமொழிகள் வழங்கும் நாட்டினிடத்திலேயே, இப்போது அவர் இருப்பவரானாலும், அவர் விரைந்து வந்து அருள் செய்வார்.

என்று, பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: எல்லா - ஏ.டி வாலிய - வெண்மையான. 2. சுதை சுண்ணாம்பு மராஅம் - வெண்கடப்ப மரம் 3 பாவடி - பரந்த அடி. 4. உரினுதொறும் உராயுந்தோறும். 5. ஆலி - வெண்பனி. 6. அறை - பாறை. 8. கல்லா - அரசநெறி அறியாத 12. தலைத்தார்ப்பட்ட - முன்னணியிலேயே போரிட்டு உயிர் துறந்த .

விளக்கம்: ‘எழினி என்பான் யானை வேட்டைக்குச் சென்றிருந்ததனால் சோழனின் ஏவலின்படி வராதுபோக’ எனவும் 910 அடிகளுக்குப் பொருள் கொள்வது உண்டு.

பாடபேதங்கள்: 2. சுரை. 8. தே எத்தர் என்ப அல்கலும். 14. அகன்கட் கதவின். 16 - 17. பாஅ, ரலர்.