பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★197



212. நின் செருக்கு அழிக!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: அல்ல குறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நோக்கிச் சொல்லியது; நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது எனவும் பாடம். சிறப்பு: சேரன் செங்குட்டுவன் கடற்பிறக் கோட்டிய செயல்.

(ஒரு நங்கையைக் காதலித்துக் களவிலே கூடி மகிழ்ந்து வரும் ஒரு தலைவன். அவள் இற்செறிக்கப்பட்டாளாக, இரவுக் கூறி பெற்றுக் கூடும் விருப்புடன் பல நாட்கள் முயன்றும் பெற வியலாது போகத் தன் நெஞ்சிற்கு இப்படிச் சொல்லுகின்றான்.)

தாஇல் நன்பொன் தைஇய பாவை
விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன,
மிகுகவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
கிளை அளில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
முளைஓ ரன்ன மின்எயிற்றுத் துவர் வாய், 5

நயவன் தைவரம் செவ்வழி நல்யாழ்
இசைஓர்த் தன்ன இன்திங் கிளவி,
அணங்குசால் அரிவையை நசைஇப், பெருங்களிற்று
இனம்படி நீரின் கலங்கிய பொழுதில்,
பெறலருங் குரையள் என்னாய், வைகலும், 10

இன்னா அருஞ்சுரம் நீந்தி, நீயே
என்னை இன்னற் படுத்தனை, மின்னுவசிபு
உரவுக்கார் கடுப்ப மறலி மைந்தற்று,
விரவுமொழிக் கட்டுர் வேண்டுவழிக் கொளிஇ,
படைநிலா இலங்கும் கடல்மருள் தானை - 15

மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து,
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பெளவம் நீங்க ஒட்டிய
நீர்மாண் எஃகம் நிறத்துச்சென்று அழுந்தக் 2O

கூர்மதன் அழியரோ-நெஞ்சே!-ஆனாது
எளியள் அல்லோட் கருதி,
விளியா எவ்வம் தலைத் தந்தோயே

ஒப்புமையில்லாத மாற்றுயர்ந்த பசும் பொன்னினாலே வடித்தெடுத்த பொற்பாவையினைப் போன்றவள்; வானிலே தவழும் இளவெயிலைத் தன் மேனியிலே போர்த்துக்