பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

அகநானூறு - மணிமிடை பவளம்


        கொண்குழை அதிரல் வைகுபுலர் அலரி
        சுரிஇரும் பித்தை சுரும்புபடச் சூடி, 5
 
        இகல்முனைத் தரீஇய ஏருடைப் பெருநிரை
        நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும்
        வால்நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
        நிழற்கவின் இழந்த நீர்இல் நீள் இடை
        அழலவிர் அருஞ்சுரம் நெடிய என்னாது, 10

        அகறல் ஆய்ந்தனர் ஆயினும், பகல்செலப்
        பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப்
        பெருமரம் கொன்ற கால்புகு வியன்புனத்து,
        எரிமருள் கதிர திருமணி இமைக்கும்
        வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை 15

        வேய்ஒழுக்கு அன்ன, சாய்இறைப் பனைத்தோள்
        பெருங்கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
        அரும்பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
        சென்று, தாம் நீடலோ இலரே; என்றும்
        கலம்பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக்கை, 2O

        வலம்படு வென்றி வாய்வாள், சோழர்
        இலங்குநீர்க் காவிரி இழிபுனல் வரித்த
        அறலென நெறிந்த கூந்தல்,
        உறலின் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.

தோழி! போர்த் தொழிலிலே சிறந்த யானைகளை உடையவர் தொண்டை நாட்டு மன்னர். அவர்களுக்கு உரியது, மேகத் திரள்கள் தவழ்வதும், ஏறுவதற்கு அரியதுமான, உயர்ந்த மலையுச்சிகளினின்றும், உயர்ந்த வெண்மையான அருவிகள் வீழ்ந்து கொண்டிருப்பதான வேங்கடமலை, அதற்கு அப்பால் -

கொய்யும் தளிரையுடைய காட்டு மல்லிகையிலே பொழுது விடியுங்காலத்திலே மலரும் பூவினைத் தம்முடைய சுருண்ட கரிய கொண்டையிலே வண்டுகள் மொய்க்கும்படியாகக் சூடிக்கொண்டு, போர்முனையிலே வென்று கொண்ட ஏறுகளையுடைய பெரிய ஆனிரைக்காக, முதிர்ந்த கள்ளாகிய நறவினை நாட்பலியாகக் கொடுப்பவர்கள், வெண்மையான நிணச்சோற்றினை உடையவரான வடுகர்கள், அவர்கள் நாட்டிலேயுள்ள, நிழலின் அழகினை இழந்துவிட்டதும், நீரற்றுக் கிடப்பதுமான நீண்ட இடைப்படும் வழியையும், நெருப்பாக எரியும் கடத்தற்கு அரியதான காட்டுவழியையும்,நீண்டு