பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 201


கிடக்கின்றதே என மனந்தளராது, நம்மைப் பிரிந்து கடந்து செல்லுதலைத் துணிந்தவர் நம் தலைவர். ஆயினும்,

எஞ்ஞான்றும் அணிகலன்களைப் பெய்வதற்காகக் கவிழ்ந்திருக்கும் கழலும் தொடியினையுடைய பெரிய கையின்கண், வெற்றி பொருந்திய வலிமை சேர்ந்த வாளினைக் கொண்டிருப்பவர் சோழர்கள். அவர்களது நீர்வளம் விளங்கும் காவிரியின் வடிந்த புனலானது. வரிவரியாகச் செய்திருக்கும் அறல்பட்ட கருமணல் போன்ற சுருண்ட கூந்தலையும், உறுதற்கு இனியதான சாயலையும் உடைய நம்முடன், சேர்ந்திருத்தலையும் அவர் மறந்தவர் அல்லர்.

பகற்பொழுது நீங்கத் தனது பல கதிர்களையும் ஒடுக்கிக் கொண்டு, ஞாயிறு மேற்றிசையிலே மறையப்போகின்ற மாலைப் பொழுதிலே, பெரிய மரத்தினை வெட்டியதனாலே காற்றுப் புகுந்து வீசுகின்ற அகன்ற கொல்லையிலே, தீக்கங்குகள் போன்று ஒளிவீசும் அழகிய மாணிக்கங்கள் விட்டு விட்டு ஒளி செய்து கொண்டிருக்கும். வெல்லும் போராற்றலையுடைய சேரனின், கொல்லி மலைக்கு மேற்கிலேயுள்ள மலைகளிலே காணப்படும் மூங்கிலின் நேரான தன்மைபோன்ற முன்கையுடன் கூடிய பணைத்த தோள்களின் பேரழகெல்லாம் சிதையுமாறு, நம்மைப் பிரிந்து சென்றவர் அவர். ஆயினும், அவர் -

ஆன்றோர்களது பெறுவதற்கு அரிய தேவருலகத்தையே அதன்பாலுள்ள அமிழ்தத்தோடும் கூடிப் பெறுவாரானாலும், தாம் காலந்தாழ்த்திருப்பவரே அல்லர். (விரைவில், வருவார் என்பது கருத்து)

என்று பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீ இயினாள் என்க.

சொற்பொருள்: 1. வினை நவில் யானை - போர்ப் பயிற்சியையுடைய யானை, தொண்டையர் - தொண்டை நாட்டார். 2. இனமழை தொகுதியான மேகங்கள் ஏற்றரும் ஏறுவதற்கு அரிய 4 கொய் குழை கொய்யப்படும் தழை. அதிரல் - காட்டு மல்லிகை. 5. பித்தை - ஆணின் மயிர். 6. இகல் முனை - போரிடுகின்ற போர் முனை. 7. நனை முதிர் நறவு - புளித்த நாட்பட்ட கள். 12. படுகதிர். அமையம் - மாலைவேளை. 15. வானவன் - சேரன் 15. கொல்லிக் குடவரை - கொல்லியாகிய குடவரையுமாம். 18. அரும் பெறல் உலகம் - வானுலகம். 20. கலம் -அணிகலன்.22.இழிபுனல்-வடியும் வெள்ளம்.24 உறலின்சாயல் - அடைவதற்கு இனிதான சாயல்