பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 203


மின்னிக் கொண்டிருக்கும் பாசறையிலே, போரிட்டு வெல்லும் புகழினை அடைவதனையே விரும்பிக், கண்களும் மூடாதவனாக இருக்கின்றான். போரும் நம்மிடத்திலேதான் பொறுப்பாக உள்ளது. நம்மவர் என்று, நம்மைத் தன் அறிவினாலே தெளிந்து ஏற்றுக்கொண்டவள், பொலிவுற்ற கூந்தலை உடையவளான நம் தலைவி. அவள்,

உயர்ந்த ஏற்றின் பொருந்திய கழுத்திலே கட்டிய, பெரிய வாயினையுடைய, தெளிவாக ஒலிக்கும் மணிகள் ஒலியினைச் செய்யவும், ஆக்களை ஒட்டிவரும் கோவலர்கள் ஆம்பற் குழலினை இசைக்கவும், அவற்றுடன் பொருந்துமாறு, பிரிந்தவர்களுக்குத் துன்பந்தரும் நல்ல யாழின்கண்ணே செவ்வழிப் பண்ணினைச் சிலர் இசைக்கவும், அரிய உயிர்களை வருத்தும் அந்தத் தெளிவான இசைகளையெல்லாம், மாரிக்காலத்து மாலையினும் தனியளாயிருந்தே கேட்பதனால், என்ன நிலையினை அடைவாளோ?

என்று, பாசறைக்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. புதைய - மூடி மறைய, பா அய்ப் - பரவி. 2. குளிர்ப்ப - குளிர்ச்சியுடைய 9. பொம்மல் ஒதி - பொலிவுற்ற கூந்தலையுடையவள். 1. சுவல் - பிடருமாம், பகுவாய் - பெரிய வாய்.12 ஆம்பல் - ஆம்பற் குழல்.14. அணங்கும் வருத்தும்.

விளக்கம்: ‘அமரும் நம்வயின் அதுவே என்றமையால், தலைவன் போர்ப்படைகளின் தலைவனாகப் பொறுப்பு வகிப்பவனாதல் வேண்டும்.

மேற்கோள்: ‘பொருள் நோக்கினால் தூதுகண்டு வருந்திக் கூறியது என, இதனை, ஏவன் மரபின் ஏனோரும் உரிய’ என்னும் சூத்திர உரையிலே காட்டுவர் நச்சினார்க்கினியர்.

பாடபேதங்கள்: 7 அடுபுகழ் வேலொடு. 8. நம்மறிவு தெளித்த,

215. வாழ்தல் ஆற்றேம்!

பாடியவர்: இறங்குகுடிக் குன்ற நாடன். திணை: பாலை. துறை: செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து தலைமகனைச் செலவழுங்குவித்தது.