பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 219



        படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
        மருதி அன்ன மாண்புகழ் பெlஇயர்,
        சென்மோ-வாழி, தோழி-பல்நாள்.
        உரவுரும் ஏறொடு மயங்கி,
        இரவுப்பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே.

தோழி, வாழ்க! வானுற உயர்ந்த நீல நிறத்தினையுடைய, பெருமலையினைச் சார்ந்த காட்டுநாட்டின் தலைவன் நம் காதலன். அவன் அடைவித்த காமநோய்க்கு ஆற்றாது நின் மேனியின் ஆழ்ந்த அழகனைத்தும் தொலைந்தன. ஆதலின், ஒன்று சொல்லுவேன் கேட்பாயாக:

முழவுகளின் முழக்கம் ஓயாத ஆரவாரத்தையுடைய இடமாகிய கழார் என்னுமிடத்தேயுள்ள, பெருந்துறையினிடத்தே நடந்த புதுநீர் விழாவிலே ஆடும், திரண்ட அழகினாலே பொலிவுற்று நிமிர்ந்த, திரண்ட தோளாற்றலையுடைய ஆட்டனத்தி என்பானின் அழகினை விரும்பிப், பரவி வந்து, தாழ்ந்த கரிய கூந்தலையுடைய காவிரிப் பெண்ணானவள், அவனைக் கவர்ந்து தன்னுடனேகொண்டு சென்றனள். அதனால்,

திக்கெல்லாம் அவனைத் துழாவித் தேடியவளாகத் தன் மதியும் மருட்சியுற்றவளாக வாடினாள் ஆதிமந்தி என்னும் அவன் மனைவி. அவளுடைய காதலனை அவளுக்குக் காட்டி தந்தது, தான் ஒலிக்கும் கடலிலே புகுந்து மறைந்தனள், பார்ப்பதற்கு அமைந்த சிறப்பினையுடைய மருதி என்பவள். அவளைத் போலச் சிறந்த புகழைப் பெறும் பொருட்டாக

பலநாட்களும், முழக்கமிட்டுக்கொண்டிருக்கும் இடியேற்றுடனே கூடியதாக இரவெல்லாம் பெருமழை பொழிந்த ஈரமிக்க சேற்று வழியிலே, அவனை நாமும் தேடிச் செல்வோமாக.

என்று, தலைமகன் சிறைப்புத் தானாத் தோழி தலை மகட்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. நிவந்த உயர்ந்த 2 உl இய நோய் - அடைவித்த காமநோய், 3. ஆய்நலம் - ஆய்ந்த பேரழகு 4 முகம் புலரா - முழக்கம் ஓயாத 5. கழா அர் - காவிரிக் கரையின் ஓர் ஊர். 6. ஈட்டெழில் - தொகுதியாகத் திரண்ட பேரெழில். 9. மாதிரம் - திசைகள். 12. மருதி - கடல் தெய்வம், 15 ஈர்ந்தண் ஆறு ஈரமான சேற்று வழி.

உள்ளுறை: காவிரி கவர்ந்த ஆட்டனத்தியை மாருதியென் பாள் ஆதிமந்திக்குக் காட்டித் தான் கடலுட் புகுந்தது என்றாள்,