பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 229



‘நெற்றியும் பசலை படர்ந்துள்ளது. தோள்கள் மெலிந்து தளர்ந்து போயின. தேமற் புள்ளிகளையுடைய அல்குல் தடத்தின் வரிகளும், தம் அழகிழந்து வாடிப் போயின. இனிஇவள் என்ன ஆவாளோ? என்று நெடிதும் நினைந்து, அதனையே ஆராய்ந்து கொண்டிருப்பவளாக நீயும் வருந்தாதே.

பொன்னிறமான பூங்கொத்துக்களுடன் விளங்கும், புலி போன்ற வேங்கை மரத்தைக் கண்டது ஒரு களிறு, அது, தன் முன்னே நிற்றலைப் பொறாது பகைகொண்டது. காயும் சினம் மிகுந்ததனால், நனைந்த கன்னத்தினின்றும் வாயிலே புகும் மிகுதியான மதநீரோடு, அந்த வேங்கையின் பூங்கொம்புகள் வருந்துமாறு, அதன் அடிமரத்திலே பாய்ந்து மோதிற்று. மிக்க வலிமையினையுடைய அந்தக் களிறு, பின்னர் தன் வருத்தம் தீரச், செம்மண் நிலத்திலேயுள்ள புழுதியிலே கிடந்தும் புரண்டது. போர்புரிந்து களத்தினையே தமதாகக் கொண்டு விளங்கிய வீரரைப்போலத் தன் குரலெடுத்தும் முழங்கிற்று. அத்தகைய முழக்கத்தினையுடைய சுரநெறிகள் பலவற்றைக் கடந்து சென்றவர் நம் காதலர். ஆயினும்

தப்பாத வாளினையும் தமிழகம் முழுவதையும் தனக்குள் அகப்படுத்தி முழங்கும் புகழ்விளங்கும் முரசினையும், தன்பால் வரும் இரவலர்க்கு வரையாது வழங்கும் பெரிய நாளோலக்கத்தையும் உடையவன் தழும்பன் ஆவான். தூங்கல் ஒரியார் என்பவரால் பாடப்பெற்ற மிகவுயர்ந்த நல்ல புகழினையும், பிடியானை மிதித்த வழுதுணங்காய் போன்ற போர்த் தழும்புகளையும் உடையவன், பெரும் பெயரினனான அத் தழும்பன் என்பவன். அவனுக்கு உரியதான, காவல் பொருந்திய மதில்களாகிய எல்லையினை உடைய ஊணுாருக்கு அப்பாலுள்ள, சிறந்த செல்வங்கள் நிலைபெற்றிருக்கும் பெருமை கொண்ட வளநகராகிய, பெரிய உப்பங் கழிகளாகிய தோட்டக்கால்களையுடைய மருங்கூர்ப்பட்டினம். அவ்விடத்து, ஒளிவீசும் கடைவீதியைப் போன்ற, 'கல்’ என்னும் ஆரவாரத்தையுடைய அலர்ச்சொற்களை, இவ்வூரிலே எழச் செய்து, நம்மைப் பிரிந்து சென்றவர் நம் காதலர் அவர், சென்றவிடத்து நோயிலராகி நிலைபெற்று வாழ்வாராக!

என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. சாயின - மெலிந்தன. 2. திதலை - தேமல். வரி - இரேகைகள். ஒற்றி - ஆராய்ந்து, 5. இனையல் வருந்தி அழுதல், 8. பூஞ்சினை புலம்ப - பூக்கள் உதிர்தலால் கொம்புகள்